Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08.11.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 08-Nov-2023

இன்றைய தியானம்(Tamil) 08.11.2023

 

அருவருப்பு

 

"மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்: உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள்" - நீதிமொழிகள் 11:20

 

"கர்த்தருக்கு அருவருப்பானவைகள்" என அநேக காரியங்கள் வேதத்திலே உண்டு. அதில் சிலவற்றை தியானித்து, நம்மை ஆராய்வோம். கர்த்தருக்கு அருவருப்பான காரியங்கள்

 

1. கள்ளத்தராசு: "கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது, சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்." (நீதி.11:1) பொதுவாக இந்த வசனம் தராசை கையாளும் வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறையாகும். தவறான எடைக்கற்களோ, அளவு படிகளையோ வைத்திருந்தால் ஆண்டவர் அவர்களை ஆசீர்வதிக்க இயலாது. நாம் கையிட்டு செய்யும் காரியங்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமானால் நாம் எல்லாவற்றிலும் உண்மையாய் நடப்பது மிகமிக அவசியம். ஏனெனில் உண்மையுள்ள மனுஷனே பரிபூரண ஆசீர்வாதம் பெறுவான்.

 

2. மாறுபாடான இருதயமுள்ளவர்கள்: "மாறுபாடான இருதயமுள்ளவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்." (நீதி.11:20) நேர்மையில்லாத, கர்த்தருக்கு பிரியமில்லாத வழியில் நடக்கிறவர்கள் அதாவது உண்மைக்கு புறம்பான, நீதிக்கு விரோதமான காரியங்களை செய்கிறவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள். நீதிமானை குற்றவாளி என்றும் குற்றவாளியை நீதிமான் என்றும் நியாயம் தீர்க்கும் பொய்யர்களை தேவன் அருவருக்கிறார். பரிதானம் வாங்கிக் கொண்டு நீதியை புரட்டி மாறுபாடாய் நடக்கிறவர்களை அருவருப்பாக மாத்திரமல்ல, அவர்களை தண்டிக்கவும் செய்கிறார். நாம் இப்படிப்பட்ட அருவருப்பான காரியங்களை செய்யாமலும், அதற்கு துணை போகாமலும் இருப்போமாக.

 

3. பொய் உதடுகள்: "பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்" (நீதி. 12:22) பொய்யை சரளமாக பேசும் அநேகர் உண்டு. அவர்கள் இது தவறு, கர்த்தருக்கு விரோதமானது என்று கூட உணர்வதில்லை. பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் பங்கடைவார்கள் என வேதம் எச்சரிக்கிறது. பொய்யை நடப்பிக்கிற ஒன்றும் தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதில்லை. (வெளி. 21:27)

 

4. துன்மார்க்கனின் வழியும், பலியும்: துன்மார்கருடைய வழியும், பலியும் அவர்களுடைய நினைவுகளும், கர்த்தருக்கு அருவருப்பானவைகள். நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார். செம்மையானவர்களின் ஜெபத்தை ஆண்டவர் கேட்டு அதில் பிரியப்படுகிறார்.  

 

இறுதியாக மனமேட்டிமையுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன். ஆகவே மனத்தாழ்மையைத் தரித்துக் கொண்டு தேவனுக்கு அருவருப்பான காரியங்களை தூக்கியெறிந்து விட்டு தேவனுக்கு பிரியமாய் வாழ்ந்து, தேவனுடைய ஆசீர்வாதத்தை சுதந்தரித்து கொள்வோமாக. ஆமென்!

- Mrs. புவனா தனபாலன்

 

ஜெபக்குறிப்பு:

ஆமென் வில்லேஜ் டிவி நிகழ்ச்சிகள் தயாரிக்கும் ஊழியர்களுக்காக மற்றும் இணைந்து செயல்படும் நபர்களுக்காக ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al