Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  28-03-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 28-Mar-2021

இன்றைய தியானம்(Tamil)  28-03-2021 (Kids Special)

கூழாங்கல் பேசுகிறது 

“உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.” – 1 கொரிந்தியர் 1:28 

ஹலோ! குட்டிச் செல்லங்களே! சந்தோஷமா இருக்கீங்களா? எல்லாரும் எங்க பார்க்குறீங்க, கீழே பாருங்க நான்தான் கூழாங்கல் பேசுறேன். என்னடா இந்த கூழாங்கல் நம்மகிட்ட என்னத்த பேசப் போகுதுன்னு நினைக்கிறீங்களா? கொஞ்ச நேரம் நான் பேசறத கேளுங்களேன். நான் ஆற்றங்கரையில் தான் இருப்பேன். ஆற்றுத் தண்ணீரில் அடிபட்டு உருண்டு, உருண்டு அழகான வலுவலுப்பான கல்லாக மாறினேன். ஆற்றங்கரையில் ஒதுங்கி கிடப்பேன். அநேகர் என்மேல் மிதித்து நடந்து போவாங்க. பலர் கைகளில் எடுத்து ரசித்துவிட்டு, ஆற்றிலேயே தூக்கி எறிந்துவிடுவார்கள். இன்னும் சிலர் என்னை எடுத்து சென்று அவர்கள் விரும்பும் பறவைகள் மற்றும் பழங்களை அடிக்க கவணில் வைத்து பயன்படுத்துவாங்க. இஸ்ரவேல் மேய்ப்பர்கள் கூட தங்கள் அடைப்பப்பையிலே எங்களை எப்போதும் வைத்திருப்பாங்க. ஆடுகளை தாக்க வரும் மிருகங்களை விரட்டவும் எங்களை பயன்படுத்துவாங்க. குட்டீஸ் கூழாங்கல் பேசுறது உற்சாகமா இருக்குதா? தொடர்ந்து கேளுங்க. நீ ஏன் அமைதலாய் இருக்கே பேசு கூழாங்கல்லே. அப்புறம் ஒருநாள் தாவீது என்ற மேய்ப்பன் வந்து என்னோடு சேர்த்து இன்னும் நான்கு கற்களை எடுத்து தன் அடைப்பப்பையிலே போட்டுக் கொண்டான். நாங்க எதற்கு பயன்பட போகிறோம். திறந்த வெளியிலே கிடந்தோம், இப்போ சிறு பைக்குள் வந்து விட்டோமே! என்று பேசிக் கொண்டிருந்தோம். திடீரென்று ஒரு சத்தம் கேட்டது. பூமி அதிரத்தக்கதாய் இருந்தது அவனது நடை. பெரிய இராட்சதன்! தாவீதை பார்த்து வா உன் மாம்சத்தை பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் கொடுப்பேன் என்று கர்ஜித்தான். அப்போது தான் இது யுத்த களம் என்பதை அறிந்து கொண்டேன். இந்த தாவீது சிறு பையனாய் இருக்கிறானே! என்ன செய்ய போகிறான் என்று பார்த்துக் கொண்டிருந்தோம். நான் பட்டயத்தோடும், ஈட்டியோடும் அல்ல, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தருடைய நாமத்தில் வருகிறேன் என்று சொல்லி அடைப்பப்பையிலே கையை விட்டதும் என் friends நான்கு பேர் வலுவிச் சென்றார்கள். நான் மட்டும் அவர் கைக்குள் சென்றேன். அடிச்சாரு பாருங்க அடி “நெத்தியடி” அவன் நெற்றியில் போய் பதிந்தேன், அவன் முகங்குப்புற விழுந்தான். தாவீது இஸ்ரவேலின் சார்பாக சென்றதால் இஸ்ரவேல் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தார்கள். எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. எந்த ஆயுதமும் இல்லாமல் சாதாரண கூழாங்கல்லான என்னைக் கொண்டே தேவன் பெரிய வெற்றியைக் கொடுத்தார்.  இது கதையல்ல, உண்மையாகவே நடந்த சம்பவம். வேதத்தில் 1சாமு.17-ஆம் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ளது. 

குட்டீஸ், உங்களையும் உனக்கு மற்ற பிள்ளைகளை மாறி எந்த திறமையும் இல்லை, உனக்கு ஒன்றுமே தெரியாதுன்னு சொல்லலாம். ஆனா நீ சர்வ வல்ல தேவனுடைய கரத்தில் உன்னை கொடுத்தால் தாவீது கூழாங்கல்லை பயன்படுத்தினதை போல, ஆண்டவர் உன் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அநேகருக்கு மகிழ்ச்சியை கொடுக்கிற பிள்ளையாய் உன்னை பயன்படுத்துவார். என்ன குட்டீஸ் செய்வீங்க தானே! Very good. 
-    Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş