By Village Missionary Movement
Tuesday, 07-Nov-2023இன்றைய தியானம்(Tamil) 07.11.2023
முடிவெடுத்தல்
"நீங்கள் புசித்தாலும், குடித்தாலும் எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்" -1 கொரிந்தியர் 10:31
உலகத்திலுள்ள ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் பலவிதமான காரியங்களைக் குறித்து முடிவெடுக்கிறோம். என்ன படிப்பது? என்ன வேலை செய்வது? யாரை திருமணம் செய்வது? போன்றவற்றிலே ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை இளைஞர்களுக்கு உள்ளது. இன்றைய முடிவே நம்முடைய நாளையதினத்தை நிர்ணயிக்கிறது. சுயநலம், வீண்பெருமை, பணஆசை போன்றவற்றால் நாம் எடுக்கும் கவனமற்ற அல்லது அவசரமான தீர்மானங்கள் நம் வாழ்நாள் முழுவதும், ஏன் சில வேளை நம் வாழ்விற்குப் பின்னும் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
ஆண்டவரின் பிள்ளைகளாக நாம் எப்படி முடிவெடுக்க வேண்டுமென்று சில குறிப்புகளைப் பார்ப்போமா? முதலாவது கர்த்தரைச் சார்ந்திருங்கள், அவரை நம்புங்கள். அப்பொழுது அவர் செய்ய வேண்டியதை நேர்த்தியாய் செய்வார். சங்கீதம் 37:5 சொல்கிறது, "உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவர் மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்." இயேசுவை நம் வழிகாட்டியாகக் கொண்டு நமது எல்லாவற்றையும் அவருடைய ஆலோசனைக்கு அர்ப்பணித்தால் கடினமான மற்றும் குழப்பமான காரியங்கள் கூட எளிமையாக முடியும்.
நம் நிலையினை, நம் தேவைகளை விண்ணப்பத்தோடு தேவனுக்குத் தெரியப்படுத்திவிட்டு அவர் மீது உறுதியாய் நம்பிக்கை வைப்பதின் மூலம் நாம் உருக்குலையாது இருக்கலாம். அவரை நோக்கி அமர்ந்து ஜெபித்துக் காத்திருப்போம். இயேசு கூட தமது பன்னிரெண்டு சீஷர்களைத் தெரிவு செய்வதற்கு முந்தின நாள் இராமுழுதும் ஜெபித்தார்.
முடிவெடுக்கும் முன் தேவ ஆலோசனையை நாட வேண்டும் என நீதிமொழிகள் புத்தகம் கூறுகிறது. ஒருவன் போதுமான ஆலோசனையைப் பெறாவிட்டால் அவனது திட்டங்கள் தோல்வியுறும். ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும் என்று வேதம் கூறுகிறது. ஆண்டவருடைய ஒத்தாசையோடு நாம் முடிவெடுக்கலாம். எப்படி அமலேக்கியர் சிக்லாகை சுட்டெரித்து அவர்களின் மனைவிகள், பிள்ளைகள், உடைமைகள் அனைத்தையும் கொள்ளையிட்டுக் கொண்டு சென்ற போது, தாவீது எப்படி கர்த்தருக்குள் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு அவரிடம் ஆலோசனை கேட்டு அமலேக்கியரை வென்று அனைத்தையும் திருப்பிக் கொண்டதைப் போல் கர்த்தரின் ஆலோசனை தான் மிகச்சிறந்த வழி ! முடிவெடுப்பதற்கு. அல்லேலூயா!!
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு:
ஆமென் வில்லேஜ் டிவி நிகழ்ச்சிகள் மூலம் அநேகர் தேவனின் அன்பை உணர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864