Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 05.11.2023 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Saturday, 04-Nov-2023

இன்றைய தியானம்(Tamil) 05.11.2023 (Kids Special)

 

விருப்பம் நிறைவேறும்

 

"உன் பேரைப் பெருமைப்படுத்துவேன், நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்" - ஆதியாகமம் 12:2

 

அன்புக்குட்டி செல்லங்களே, கால்வருடத் தேர்வு முடிந்து அரை வருடத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பீர்கள். முன்பு இருந்ததை விட அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற விருப்பம் மனதில் இருந்தால் நம் இயேசப்பா அதை நிச்சயம் நிறைவேற்றுவார். அதற்கு நாம் மூன்று காரியங்கள் செய்ய வேண்டும். ஒன்று விருப்பம், இரண்டு இயேசப்பாவிடம் சொல்லணும், மூன்று தேவனுக்குப் பயந்து அவருக்கு பிரியமாய் நடக்கணும் இதை செய்து நாமும் படிக்க தொடங்கினால் இயேசப்பா நமக்கும் அற்புதம் செய்வார். சரி, நாம் ஒரு கதை கேட்கலாமா?  

 

நல்ல திறமையான சிற்பி ஒருவர் இருந்தார். சிற்பி என்றால் கற்களில் உருவங்களை, நினைவுச் சின்னங்களாக செதுக்குகிறவர்கள். அந்த சிற்பியின் கண்களில் 2 பாறைகள் தென்பட்டன. அவர் அதை பார்த்தவுடன் இதில் இரண்டு சிற்பங்களை செதுக்க வேண்டும் என்று நினைத்து, சில நண்பர்களாக சிற்பிகளை அழைத்து வந்து இந்த இரு பாறைக்கற்களில் உலகப் புகழ்பெற்ற, எல்லாரும் விரும்பக் கூடிய இரு மனிதர்களை செதுக்க திட்டமிடலாமா என்றார். அவர்களோ அந்தப் பாறையை கண்டு இது ஒரு சாதாரணகல் தான். இதில் போய் உலகப் புகழ்பெற்ற மனிதர்களை செதுக்குவது கூடாத காரியம் என்று ஒதுங்கி விட்டார்கள். ஆனால் அவர் தன் மனதில் ஒரு தீர்மானம் செய்து அதற்காக ஜெபமும் செய்துவிட்டார். எனவே அதை அவர் அலட்சியமாக விட்டுவிட விரும்பவில்லை. திடீரென்று தேவன் அவர் மனதில் ஒரு நல்ல சிற்பியை நினைவு படுத்தினார். அவரை அழைத்து வந்து அவரிடம் இந்த கற்களை காட்டி தன் விருப்பத்தையும் தெரிவித்தார். அவரும் ஜெபம் செய்து யாரை செதுக்க வேண்டும் என்று நினைவுபடுத்தும்படி தேவனிடம் விசாரித்தார். அப்பொழுது தாவீது சுரமண்டலம் வாசித்து கர்த்தரை மகிமைப்படுத்துவதும், அடைப்பைக் கல்லைக் கொண்டு கோலியாத்தை வீழ்த்தியதும் அவர் நினைவுக்கு வந்தது. அதை அப்படியே சிற்பமாக செதுக்கி விட்டார். அவர் அப்படி செதுக்கும் போது பல வேண்டாத பாகங்களை செதுக்க வேண்டியதிருந்தது. பின் உலகம் வியக்கும் வண்ணம் விலையேறப் பெற்ற சிற்பமாக அது உருப்பெற்றது. பார்க்கும் அனைவருக்கும் நிஜமாகவே தாவீது சுரமண்டலம் வாசிப்பது போலவும், யுத்தத்தில் ஒரே கல்லில் கோலியாத்தை வீழ்த்துவது போலவும் இருந்ததாம்.

 

ஓகே, செல்லம் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், தாவீது சாதாரண ஆயனாக இருந்தாலும் அவர் மனதில் தேவனை மகிமைப்படுத்தி உயர்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் இருந்ததால், அவர் இன்றும் நம்மால் நினைவு கூரப்படும் முன்மாதிரியான தேவபிள்ளையாக காணப்படுகிறார். நீங்களும் உங்களை சாதாரணமாக நினைக்கிறீர்களா? இல்லை; உங்களையும் இயேசுவிடம் செதுக்கும்படி ஒப்புக்கொடுத்தால், உலகம் வியக்கும் வண்ணம் அவர் உங்களை உருவாக்கி விடுவார். நாம் உயிருடன் இருக்கும் போது மட்டுமல்ல, இறந்த பின்பும் உலகம் நம்மை நினைவு கூரும்! சரியா?

- Sis. தெபோராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al