Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 03.11.2023
Share:

By Village Missionary Movement

Friday, 03-Nov-2023

இன்றைய தியானம்(Tamil) 03.11.2023

 

நம்பி கொடுக்கப்பட்ட பொறுப்பு

 

"…அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்" – மத்தேயு 16:27

 

விசித்திரமான பழங்காலக் கதை ஒன்று உண்டு. தேவன் இந்த உலகத்தைப் படைத்த போது எல்லா படைப்புகளையும் கவனித்துக் கொள்ள ஒவ்வொரு தூதனை நியமித்தார். மனிதனுக்கு, கடல்வாழ் ஜந்துகளுக்கு, காட்டுமிருகங்களுக்கு, நாட்டு மிருகங்களுக்கு, மரங்களுக்கு, புற்களுக்கு என ஒவ்வொரு தூதனை நியமித்தார். புற்களுக்கு நியமிக்கப்பட்ட தூதன் இந்த சின்ன புல்லுக்கு போய் நான் என்ன செய்ய என்று நினைத்து கொண்டு அதைப் பராமரிக்காமல் விட்டான். புல்காய்ந்து போனது. புல் இல்லாமல் ஆடு, மாடுகள் காட்டில் வாழும் மான்கள் போன்றவை பசியால் வாடியது. தேவன் அந்த தூதனிடம் உனக்கு கொடுக்கப்பட்ட வேலை சிறியது என எண்ணி அசட்டையாய் இருந்தாய். இப்போது உன் வேலையின் அருமை தெரிகிறதா? என்றார்.  

 

இதுபோலத்தான் இன்று அநேகர் தங்களுக்குக் கொடுத்த வேலை சிறியது, பெரியது, அற்பமானது, சிறந்தது என நினைத்து அசட்டையாக இருக்கின்றனர். ஒன்று முக்கியமான வேலை, இன்னொன்று முக்கியமற்ற வேலை என நினைத்துக் கொள்கின்றனர். உங்களுக்கு இந்த பொறுப்பை, வேலையைத் தந்தது மனிதர்களாய் இருக்கலாம். ஆனால் வேலை செய்யும் பலர் இருக்க, உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தை கர்த்தரே அவர்கள் மனதில் வைத்தார். தேவனின் அனுமதியில்லாமல் உங்களுக்கு ஒன்றும் கொடுக்கப்படமாட்டாது. உங்களை நம்பி தேவன் தந்த பொறுப்பை நீங்கள் எப்படி நிறைவேற்றுகிறீர்கள். அவர் நம்பி தந்த பொறுப்பை ஜாக்கிரதையாய் நிறைவேற்றி முடிக்கும் போது அதற்கான பலன் உண்டு. பன்னிரெண்டு ஏர் மாடுகள் பூட்டி உழுதவர் எலிசா.(1இரா. 19:19) அவ்வளவு வசதி படைத்தவராக இருந்தார். ஆனால் அபிஷேகிக்கப்பட்டு எலியா பின் சென்றதும் அவருக்கான எல்லா பணிவிடைகளையும், எலியாவின் கைகளுக்கு தண்ணீர் வார்ப்பதையும் ஜாக்கிரதையாய் செய்கிறார். “ தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால் அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்” (நீதிமொழிகள் 22:29) என்கிறார்.

 

பிரியமானவர்களே, உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு மற்றும் வேலைக்கு பின்னும் பரலோக ஆசீர்வாதம் உண்டு. ஏனெனில் இந்தப் பொறுப்பு, வேலை, உங்களுக்கு பரலோக தேவனால் கட்டளையிடப்பட்டது என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் எஜமானன் கிறிஸ்துவே. உலகப்பிரகாரமான கூலியைப் பார்த்து, மனிதரைப் பார்த்து பரலோக ஆசீர்வாதத்தை இழக்காதீர்கள். எங்கு இருந்தாலும் செய்யும் வேலையை ஜாக்கிரதையாய் செய்தாலே பரலோக ஆசீர்வாதம் தேடிவரும். நீங்கள் தேடிச் செல்ல வேண்டாமே!

- Mrs. தவமணி வைரவேல்

 

ஜெபக்குறிப்பு: 

சுவிசேஷ முகாமின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al