Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 01.11.2023
Share:

By Village Missionary Movement

Tuesday, 31-Oct-2023

இன்றைய தியானம்(Tamil) 01.11.2023

 

WHAT NEXT ? . . .

 

"…நடக்கப்போகிறது இன்னதென்று மனுஷன் அறியான்;" - பிரசங்கி 10:14

 

நம் பிள்ளைகள் 12ம் வகுப்பு முடித்ததும் அவர்களிடம் றாயவ நேஒவ என கேட்கிறோம். வாலிபர்கள் ஒவ்வொரு நாளும் அடுத்து என்ன? என்ற கேள்வியை உபயோகிக்கின்றனர். ஆனால் இந்தக் கேள்வியை சோர்ந்து போகும்போதும், கவலையுடன், தோல்வியடைந்து அமர்ந்திருக்கும் போதும் தன்னிடமாய் கேட்பது இல்லை.

 

நன்கு ஜெயமாய், வைராக்கியமாய், மனம் விரும்பியபடி போய்க் கொண்டிருந்த புதிய ஏற்பாட்டு சவுலின் வாழ்வில் ஒரு வீழ்ச்சி! தன்னால் முன்னேற முடியவில்லை, குதிரையிலிருந்து விழுகிறார். பட்ட பகலில் ஒளியையும், சத்தத்தையும் கேட்டு பயந்து நடுங்குகிறார். ஆனால் அவர் அதோடு எல்லாம் முடிந்தது என மன்னிப்புக் கேட்டு முடித்து விடாமல் what next என சிந்தித்து என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்? என கேட்கிறார். இதனை எதிர்பார்த்திருந்த கர்த்தர் அவருக்கான திட்டத்தை தெளிவாய் கொடுக்கிறார்.

 

சவுலும் பவுலாக மாறி தன் வழியை மாற்றுகிறார். தேவன் உடன் இருந்து நடத்துகிறார். "என்னைப் பின்பற்றுங்கள்" என தைரியமாய் பவுல் சொல்லும்படியாகவும் இன்னும் அநேகர் அவரை பின்பற்றும் முன்மாதிரியான வாழ்வு வாழ தேவன் உதவினார். இன்றும் நீ தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறாயா? அல்லது பாவ சேற்றில் வீழ்ந்து விட்டாயா? இனி வாழ்வே எனக்கு இல்லை நரக வாழ்வு தான் என்கிறாயா? இல்லை . . . தேவன் உனக்காக ஒரு திட்டத்தோடு காத்திருக்கிறார். இந்த தியானம் மூலம் உன்னை சந்திக்கிறார். நீ பாவத்தில் வீழ்ந்தது உண்மைதான். இதை வாசித்த பின்னும் அதே பாதையில் செல்லாமல் உன் வழியை மாற்று. what next என சிந்தித்து உம் சித்தம் செய்ய அர்ப்பணிக்கிறேன் என அர்ப்பணித்து அவர் கரம் பற்றிக் கொள். வீழ்ந்த நீ எழும்பு. சிம்சோன் பாதை மாறி கேலிப் பொருளாக மாறினான். ஆனால் அப்படியே மரிக்க விருப்பமில்லை what next என சிந்தித்து கர்த்தரிடம் வாய்ப்பு கேட்டான். அவன் மரிக்கும் போது செத்தவர்கள் அநேகம். தாவீது பாவத்தில் விழுந்தார். ஆனால் தூசியை உதறி விட்டு எழும்பி ஓடி ஜெயமாய் முடித்தார்.

 

வாலிபனே! நீயும் விழுந்து விட்டால் கலங்காதே. எல்லோர் வாழ்விலும் வீழ்ச்சி உண்டு. எழும்பு! எழும்புவதற்கான பெலன் உனக்குள் உண்டு. எழும்ப ஆசைப்படு, முயற்சி செய். பெலன் தானாய் வரும். What next என இனி மற்றவரிடம் கேட்காதே; சோர்ந்து போன உன் ஆத்துமாவிடம் கேள். தேவனின் சித்தத்திற்கு அர்ப்பணி, அவர் கரம் பற்றிக் கொள். உன்னையும் பெரிய அளவில் அநேகருக்கு பயனுள்ளவர்களாய் தேவன் மாற்றுவார். ஆமென்.

- K. டேவிட் கணேசன்

 

ஜெபக்குறிப்பு: 

இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருந்து நடத்த ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al