Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 31.10.2023
Share:

By Village Missionary Movement

Tuesday, 31-Oct-2023

இன்றைய தியானம்(Tamil) 31.10.2023

 

சிறப்பான ஓட்டம்

 

"நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன் விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்." – 2 தீமோத்தேயு 4:7

 

இந்தியாவின் முதன்மையான தடகள வீராங்கனையாக மன்கவுர் என்ற பெண் தனது 103வது வயதில் போலந்து நாட்டில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள பட்டய போட்டியில் பங்கேற்றார். வியப்பூட்டும் விதமாக ஈட்டி எறிதல், குண்டு எறிதல், 60 மீட்டர் விரைவோட்டம், 200 மீட்டம் ஓட்டம் என நான்கு பிரிவுகளிலும் மன்கவுர் தங்கம் வென்றார். அதிலும் ஆச்சரியம் 2017ம் ஆண்டில் ஓடினதைக் காட்டிலும் விரைவாக ஓடியிருந்தார். கவுர் ஒரு கொள்ளுப் பாட்டியாகத் தனது இரண்டாம் நூற்றாண்டை சிறப்பாக முடித்தார்.

 

அப்போஸ்தலனாகிய பவுலும் தன் இளைய சீடனாகிய தீமோத்தேயுவுக்கு தன்னுடைய வாழ்வின் இறுதிநாட்களுக்குள் வந்திருப்பதை எழுதினார். நான் தேகத்தை விட்டு பிரியும் காலம் வந்தது. (2தீமோ.4:6,7) “நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்தேன். விசுவாசத்தை காத்துக் கொண்டேன். இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது” என்று பவுல் தனது வியத்தரு சாதனைகளை இளைய சீடனாகிய தீமோத்தேயுவுக்கு விளக்கிக் காண்பிக்கிறார்.  

 

பிரியமானவர்களே! நாமும் நம்முடைய வாழ்வில் ஆண்டவருக்காக செய்த காரியங்கள் எத்தனை? எனக்கு வயதாகி விட்டது, என்னால் ஒன்றும் முடியாது என்று ஒதுங்கிக் கொள்கிறோமோ? இருக்கிற இடத்தில் நல்ல சாட்சியாக, விளக்காக ஆண்டவருக்காக எழுந்து பிரகாசிக்க விரும்புகிறோமா? பவுலின் பெலவீன நேரத்திலும் "என் கிருபை உனக்குப் போதும் உன் பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" என்று உற்சாகப்படுத்துகிற இயேசுகிறிஸ்து கூட இருந்தது போல இன்று நம்முடனும் இருக்கிறார். எனவே, நம்முடைய ஓட்டத்தை சிறப்பான ஓட்டமாக ஓடி முடிப்பதற்கு ஒருபோதும் வயது தடையில்லை. ஆகவே சாக்கு போக்குகளைத் தூர எறிவோம். பெலவீனமோ, பாடுகளோ, வயதோ தேவனுக்காக வாழ்வதை தடை செய்ய முடியாது என்பதை உணர்ந்து தொடர்ந்து நம்முடைய ஓட்டத்தை தேவ துணையோடு சிறப்பாக ஓடி முடிப்போம். ஆண்டவர் நமக்கு உதவி செய்வாராக.

- Mrs. ஞானசெல்வம் செல்வராஜ்

 

ஜெபக்குறிப்பு: 

தமிழ்நாட்டில் எல்லா பணித்தளங்களிலும் எழுப்புதல் ஜெபமையம் கட்டுவதற்கு தேவையான நிலங்கள் வாங்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al