By Village Missionary Movement
Monday, 30-Oct-2023இன்றைய தியானம்(Tamil) 30.10.2023
BE STILL
"நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்;…” - சங்கீதம் 46:10
விமலன் டூவீலரில் போகும் போது கீழே விழுந்து காலில் அடிபட்டு கால் ஊன்ற முடியாமல் இருவர் உதவியுடன் பிரபலமான எலும்பு டாக்டரை பார்க்கச் சென்றான். தான் வேதனையோடு சென்றதால் டாக்டர் உடனே வந்து பார்ப்பார் என எண்ணினான். ஆனால் அங்கே நர்ஸ் முதலுதவி செய்து கொண்டே பெயர், வயது, போன் நம்பர் கேட்டு பதிந்து கையில் டோக்கன் கொடுத்தார். டோக்கனை பார்த்த விமலன் அதிர்ந்தார். ஏனெனில் டோக்கன் நம்பர் 33. 2 மணி நேரம் ஆகியும் 20 ஆவது நம்பர்தான் வந்தது. விமலன் காத்திருக்க முடியாமல் நான் வேதனையோடு இருக்கிறேன், டாக்டர் வந்து பார்க்காமல் இப்படி உட்கார வைத்து விட்டீர்களே என புலம்பினார். நீ பொறுமையோடு இருந்தால் டாக்டரின் சரியான, நேர்த்தியான சிகிச்சையை பெற்றுக் கொள்ளலாம், அறியலாம், வேதனை மறைந்துவிடும் என்று சொல்லி "பொறுத்திரு, காத்திரு, குணமாகும்" என்ற வாசகம் எழுதிய போர்டை உடன் இருந்தவர் காண்பித்தார்.
இன்று அவசர உலகில் பிஸியான வாழ்வில் காத்திருத்தல், அமைதியாக இருத்தல் என்பது யாரிடமும் இல்லை. டாக்டருக்காக, பஸ்ஸிற்காக, டிரெயினிற்காக கூட உலக வாழ்வில் காத்திருக்கின்றனர். ஆனால் அமைதியாக இல்லை முறுமுறுப்போடு! ஆனால் ஆவிக்குரிய வாழ்வில் காத்திருக்குதல் என்பது இல்லவே இல்லை. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி கானானை நோக்கி வரும்போது ஒரு பக்கம் செங்கடல், மறுபக்கம் பார்வோனின் சேனை என இருந்த போதிலும் கர்த்தரிடம் சென்ற போது கர்த்தர் நீங்கள் நின்று கொண்டு இன்றைக்கு கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள் என்கிறார். Stand still என்று ஆங்கில வேதாகமத்தில் உள்ளது, "இன்னும் நின்று கொண்டு இப்ப நீங்க செய்வதறியாது இருப்பது போல் சுயமாய் ஒன்றும் செய்யாமல் இருங்கள்" என்று. மோசே கோலை நீட்டியதும் பாதை வந்தது. கடந்து சென்றனர். அதுமாத்திரமல்ல இன்று கண்ட எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள் என்ற வாக்கையும் அவர்கள் கண்காண நிறைவேற்றினார்.
பிரியமானவர்களே! காத்திருப்பது நமக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இதுவரை காத்திருந்தேன் கிடைக்கவில்லையே என்றாலும் ஏதாவது சுய முயற்சி செய்து கொண்டு இருப்பீர்கள் அல்லது புலம்பிக்கொண்டு, முறுமுறுத்துக் கொண்டிருப்பீர்கள். இன்று எல்லாவற்றையும் நிறுத்தி தாமதித்தாலும் எனக்கான திட்டம் என்னிலே நிறைவேறும் என்றவிசுவாசத்தோடு தொடர்ந்து காத்திருங்கள். தேவன் உங்கள் மேல் வைத்த திட்டத்தை உங்களைக் கொண்டே நிறைவேற்றுவார்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
கண்மணிப்பிள்ளைகள் இயேசுவுக்காக திட்டத்தில் அநேகர் தங்களை இணைத்துக் கொள்ள ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864