Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  27-03-2021
Share:

By Village Missionary Movement

Saturday, 27-Mar-2021

இன்றைய தியானம்(Tamil)  27-03-2021

தூக்கி விடு....!  

“ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்;…” - பிரசங்கி 4:10 

அமெரிக்காவில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கென நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சிறுவர்கள் அனைவரும் ஓடத் தொடங்கினர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு சிறுவன் கால் தவறி கீழே விழுந்தான். இதைப் பார்த்த மற்ற அனைத்து சிறுவர்களும் தங்கள் ஓட்டத்தை நிறுத்தி அந்த சிறுவனின் இரண்டு கைகளையும் பிடித்து தூக்கி விட்டனர். பின்பு அனைவரும் ஒன்று சேர்ந்து ஓடினர். இதைப் பார்த்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தன் இருக்கையை விட்டு எழுந்து நின்று கைகளைத் தட்டினார். இதைக் கண்டவுடனே மைதானத்தில் இருந்த அனைவருமே எழுந்து நின்று கைகளைத் தட்டி அந்த சிறுவர்களின் செயலைப் பாராட்டினர். 

பரிசுத்த வேதாகமத்தில் விசுவாசத்தில் பலவீனமுள்ளவனை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று வாசிக்கிறோம். நமக்கு பலம் இருக்கலாம். ஆனால் பலவீனருடைய பலவீனங்களைத் தாங்க வேண்டும் என வேதம் கூறுவதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரியாருக்கு எழுதும் கடிதத்தின் 14 மற்றும் 15ம் அதிகாரத்தில் இதை வலியுறுத்துகிறார். விழுந்தவனை தூக்கி விடுவது என்பது உன்னதமான ஒரு ஊழியம். லூக்கா 10ம் அதிகாரத்தில் சமாரியன் இதைத்தான் செய்கிறான். தன் பிரயாணத்தை நிறுத்தி குற்றுயிராக கிடந்த அந்த மனுஷனைப் பராமரித்தான். அவனைத் தூக்கி எடுத்து தன்னோடு அழைத்துச் சென்று சத்திரத்துக்கு கொண்டு போய் பராமரித்தான் எனப் பார்க்கிறோம். இப்படி வாழ்க்கையில் பல காரணங்களால் சோர்ந்து விழுந்து கிடப்பவர்களை தூக்கி விடுவதின் முக்கியத்துவத்தை வேதம் நமக்கு உணர்த்துகிறது. 

இதை வாசிக்கின்ற நண்பர்களே! ஆண்டவரை ஏற்றுக்கொண்டு வாழும் இந்த வாழ்க்கையின் அடிப்படைக் காரியங்களில் ஒன்று மற்றவர்களைத் தூக்கி விடுவது. நாம் இருக்கும் இடங்களில், படிக்கும் பள்ளியில், பணிபுரியும் இடங்களில், ஊழியம் செய்யும் பணித்தளங்களில் நம்மை சுற்றி சிலர் இழப்புகள் மற்றும் பெலவீனங்களினிமித்தம் வாழ்க்கையில் விழக்கூடும். நாம் அவர்களைத் தூக்கிவிடவேண்டிய இடத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. இப்படி நாம் செய்யும்போது பரலோகத்தின் தேவன் நம்மைப் பார்த்து மகிழ்ச்சியடைவார். வாழ்க்கையின் ஓட்டத்தில் அநேகக் காரணங்களினால் சோர்ந்து, நொந்து போய் விழுந்துவிடுகிறவர்கள் அநேகர். அவர்களுக்காக நாம் நமது ஓட்டத்தை கொஞ்சம் நிறுத்தி, அவர்கள் மீது கவனம் செலுத்தி, அவர்களைத் தூக்கி விடுவோம். 
-    T. சங்கர்ராஜ் 

ஜெபக்குறிப்பு:
கழுதைகள் கையேடு என்று ஊழியர்களுக்காக வெளியிடப்படும் மாத இதழ் தவறாமல் அச்சடிக்கப்பட ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş