Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 28.10.2023
Share:

By Village Missionary Movement

Saturday, 28-Oct-2023

இன்றைய தியானம்(Tamil) 28.10.2023

 

மேன்மையான தேவ திட்டம்

 

"நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்;” - சங்கீதம்139:14

 

நம் சரீரம் எவ்வாறு இயங்குகிறது, அது எப்படி உருவாக்கப்பட்டது என்பதை குறித்து என்றாவது நாம் யோசித்து பார்த்தது உண்டா? நாம் குழந்தையாய் பிறக்கும்போது உள்ள 350 எலும்புகள் நாம் வளரும் போது அது ஒன்றோடு ஒன்று இணைந்து 206 எலும்புகளாக மாறி விடுகின்றன. இதில் 52 எலும்புகள் நம் பாதத்தில் மட்டுமே இருப்பது ஆச்சரியமல்லவா?

 

நம் கைரேகை மட்டுமல்ல, நம் நாவில் உள்ள ரேகையும், கண்பார்வையும் தனித்தன்மை வாய்ந்ததாகும். நம் உடலில் உள்ள தண்ணீரை பல குடங்களில் நிரப்பலாம். நமது வாழ்நாளெல்லாம் நம் வாயிலிருந்து வரும் உமிழ்நீரை 2 நீச்சல் தொட்டிகள் நிரப்பலாம். நம் மூளை 85 சதவீதம் தண்ணீரால் ஆனது. நம் சரீரத்திலுள்ள ஒவ்வொரு உயிரணுக்கள் மற்றும் உறுப்புகளும் இயங்குவதை சற்று யோசித்துப் பார்த்தால் இதை சிருஷ்டித்த சிருஷ்டிகர் எவ்வளவு பெரியவர் என்பதை ருசி பார்க்க முடிகிறது.

 

பக்தனாகிய தாவீது சங்கீத புஸ்தகத்தில் இப்படியாக எழுதுகிறார், "நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன் உமது கிரியைகள் அதிசயமானவைகள் அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்." தாவீது கர்த்தரின் படைப்பை முற்றிலும் அறிந்தவராய் இருந்தார்.

 

பிரியமானவர்களே! நம்முடைய சரீரத்தில் ஒவ்வொரு அவயவத்தையும் அவர் நேர்த்தியாய் உண்டாக்கியுள்ளார். ஆம், நம்மை இவ்வளவு நேர்த்தியாய் சிருஷ்டித்த கர்த்தர் நமக்கென்று ஒரு உன்னத திட்டத்தை வைத்திருக்கிறார். நம்முடைய துவக்கம், நாம் தற்போது செய்து கொண்டிருப்பது, நம்முடைய எதிர்காலம் என எல்லாவற்றையும் அறிந்தவரான இயேசுவானவரின் திட்டம் மேன்மையானது. அந்த திட்டம் உலகத்துக்குரியதல்ல, நித்தியத்திற்கு உரியது. எனவே அந்த திட்டத்திற்கு நேராக நம்மை அர்ப்பணிப்போம், பயணிப்போம். மேன்மையான தேவனின் திட்டத்தின் மையத்திற்குள்ளாகவே நம்மைக் குறித்ததான தேவதிட்டத்தை அவர் நிறைவேற்றுவார்.

 

ஜெபக்குறிப்பு: 

நமது வளாகத்தில் ஓய்வு பெற்ற மிஷனெரிகளை தாங்கும் பங்காளர்கள் அநேகரை தேவன் எழுப்ப ஜெபியுங்கள். 

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al