Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 27.10.2023
Share:

By Village Missionary Movement

Thursday, 26-Oct-2023

இன்றைய தியானம்(Tamil) 27.10.2023

 

SMELL

 

"…எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” - 2 கொரிந்தியர் 2:14

 

இந்தியாவில் மரத்தில் விளையும் முக்கியமான நறுமணப் பொருள்களில் ஒன்று இலவங்கப்பட்டை என்னும் வாசனை வீசும் பட்டை. இந்த இலவங்கப்பட்டை உணவுப் பொருட்களை பதப்படுத்தும் குணம் கொண்டது. பட்டையிலுள்ள பினால் என்னும் வேதிப்பொருள் உணவின் மீது பாக்டீரியா வளர்ந்து பொருள் கெட்டுப் போவதைத் தடுக்கிறது. அதனால் இதனை முக்கியமாக மாமிசத்தைப் பதப்படுத்த பயன்படுத்துகின்றனர். மேலும் பட்டை உணவுக்கு ரம்மியமான மணத்தையும் கொடுக்கிறது. இப்படிப்பட்ட சிறந்த தன்மையை இயற்கையான மரத்திற்கு கொடுத்தார் கர்த்தர்.

 

மத்தேயு 4ம் அதிகாரத்தில் இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்கு கொண்டு போகப்பட்டார். அப்பொழுது சோதனைக்காரன் பலவிதமான சோதனைகளால் இயேசுவை சோதிப்பதை நாம் அறியலாம். இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்ற அவனுடைய கேள்விக்கு இயேசுவின் பதில் மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதே! நிச்சயமாகவே இயேசுவானவர் நறுமணம் வீசக்கூடிய வார்த்தைகளினால் மாத்திரமே சோதனைக்காரனை வெற்றி பெறுகிறார். இயேசு பூமியின் வாழ்ந்த நாட்களில் அவருடைய வார்த்தைகளில், செய்கைகளில் அற்புதங்களை செய்யக்கூடிய இடங்களிலும் அவர் நறுமணம் வெளிப்பட்டது. காரணம் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தால் நிரம்பி இருந்ததே.

 

பிரியமானவர்களே, எப்படி ஒரு இலவங்க பட்டையானது உணவு பொருளை மணக்க செய்கிறதோ அப்படித்தான் கர்த்தருடைய வார்த்தைகள் நமக்குள் இருக்கும்போது அது ஜீவ வாசனையாக வெளிப்படும். அந்த வார்த்தைகள்தான் பாக்டீரியா போன்ற பொல்லாத பிசாசுகளை அழித்துபோட வல்லமையுள்ளதாய் மாற்றும். நம் ஒவ்வொருவரையும் இயேசு நறுமணம் வீசக்கூடியவர்களாக இந்த பூமியில் வைத்துள்ளார். நமக்கு கொடுக்கப்பட்ட காலம் முடிவதற்குள் எங்கேயெல்லாம் நறுமணம் கொடுக்க முடியுமோ அங்கேயெல்லாம் நறுமணம் வீசுவோம். ஒரு சாதாரணமான மரத்திற்கு இவ்வளவு நறுமணம் வீசக்கூடிய தன்மையை கொடுத்திருப்பார் என்றால், அவருடைய சாயலாக படைத்த நமக்கு அந்த வல்லமையை கொடுத்திருக்க மாட்டாரா?

- Mrs. சக்தி சங்கர்ராஜ்

 

ஜெபக்குறிப்பு: 

பணித்தளங்களில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளில் நமது ஊழியத்தில் இருந்து ஆதரிக்கப்படும் ஒவ்வொரு மாணவர்களுக்காக ஜெபியுங்கள்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet