Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 26.10.2023
Share:

By Village Missionary Movement

Thursday, 26-Oct-2023

இன்றைய தியானம்(Tamil) 26.10.2023

 

சோர்ந்து போகாதே

 

"ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது” - நீதி. 24:10

 

ராமுவின் மரக்கடையில் ஒரு எலி புகுந்து அங்குள்ள மரங்களை கடித்துக் கொண்டிருந்தது. பின்பு அது கடும் தொல்லை கொடுத்து வந்தது. எலியை ஒழித்துக் கட்ட எண்ணி ஆங்காங்கே எலிப்பொறிகளை வைத்தார் ராமு. எலி உயிருடன் சிக்கி இருந்ததைப் பார்த்த ராமுவிற்கு சந்தோஷம். பின் எலியைக் கொன்று போட்டார். ஆனால் அவருக்கு வந்த ஒரு ஆச்சரியம் என்னவென்றால், தன் கடையிலுள்ள மரத்தைக் கொரிக்கும் எலி இந்த மரப்பொறியைக் கொரித்து வெளியே வரலாமே? ஏன் வரவில்லை என சிந்தித்தார்.

 

நம்முடைய வாழ்விலும் ஒரு நெருக்கம் வந்ததும் நெருக்கம் மட்டுமே கண்முன் இருக்கிறது. யார் தப்புவிப்பார் என புலம்புகிறோம், தவிக்கிறோம். ஆனால் தப்புவிப்பவரை விட்டு விட்டு மனிதரையே தேடி தவிப்பதால் ஏமாற்றமடைந்து பெலனை இழக்கிறோம். நான் முதிர்வயது வரை தாங்குவேன், ஏந்துவேன், சுமப்பேன் என்று ஏசாயா 46:4 ல் கூறுகிறார். அவர் சர்வவல்லமையுள்ளவர், வாக்கு மாறாதவர்! மேலும் நான் உன்னை தப்புவிப்பேன் நீ பயப்படுகிற மனுஷரின் கையிலே ஒப்புக் கொடுக்கப்படுவதில்லை என்று எரேமியா 39:17 ல் கூறுகிறார். உங்களின் எல்லா நெருக்கத்திற்கும், கவலைக்கும், கஷ்டத்திற்கும் அவரிடம் எளிய வழியுண்டு. அதனை அறிய நெருக்கத்திலும், கவலையிலும் கர்த்தரை நம்பி அவரிடம் கேட்டால் போதும். அவர் உங்களை போதித்து நடத்துவார். அப்படித்தான் மோசேயும், யோசுவாவும் ஆயிரக்கணக்கான ஜனங்களை நடத்தினர். ஒருமுறை அவர்கள் முன்னால் செங்கடல், பின்புறம் பார்வோனின் படைகள்! மிகுந்த நெருக்கம்! மோசே கர்த்தரை நோக்கிப் பார்த்தார். தேவன் எளிய வழியைக் கூறினார். கோலை நீட்டு என்றார். நீட்டினார் செங்கடல் இரண்டாக பிளந்தது. அவ்வளவுதான்! எகிப்தியரின் அச்சாணியை உருவச் செய்வது போன்ற கடினமானவற்றை தேவன் பார்த்துக் கொண்டார்.  

 

இதை வாசிக்கும் அன்பரே! உங்கள் வாழ்விலும் நெருக்கம், கஷ்டம், அடுத்த அடி எங்கு வைப்பதென்று தெரியாமல் இருக்கிறீர்களா? எளிய வழியில் கடக்க துணைபுரியும் கர்த்தரை பற்றிக்கொள்ளுங்கள். உலகத்திலே உபத்திரவம் உண்டு. உலகத்தை ஜெயித்தேன் என்ற கர்த்தரை பற்றிக்கொள்ளுங்கள். நீங்களும் ஜெயிக்கலாம்.

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்

 

ஜெபக்குறிப்பு: 

நம்மிடம் முழு வேதாகமம் பெற்றுக் கொண்ட ஒவ்வொரு நபர்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al