By Village Missionary Movement
Sunday, 22-Oct-2023இன்றைய தியானம்(Tamil) 23.10.2023
ஜெபியுங்கள்
"சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது” - ரோமர் 10:1
தன் ஜனங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று பாரப்பட்டு விண்ணப்பம் செய்கிற அப்.பவுலின் வார்த்தைகளை மேலே வாசித்தோம். பொதுவாக ஜெபங்கள் பல வகைப்படும். அதில் தங்களுக்காக தங்கள் காரியங்களுக்காக ஜெபிக்கும் மக்கள் அநேகம் பேர் உண்டு. இன்றைக்கு நாம் வாசிக்கும் ஜெபத்தில் தன்னைச் சுற்றியுள்ள, தான் சார்ந்துள்ள ஜனங்களுக்காக மன்றாடுகிற ஒரு ஜெபத்தை பற்றி வாசிக்கின்றோம்.
சார்லஸ் CH ஸ்பர்ஜன் எழுதிய The soul Winner என்ற புத்தகத்தில் ராகேலின் கதறலை பற்றி குறிப்பிட்டுள்ளார். எனக்கு பிள்ளை கொடும் அல்லது நான் சாகிறேன் என்று அவள் கதறினாள். அதைப்போல நம்மில் ஒருவர் கூட தேவனுடைய ராஜ்யத்தில் மலட்டுத்தன்மையாய் இருப்பதை விரும்பாமல் கதறி அழ வேண்டும். ஏதாவது ஒரு ஆத்துமாவையாவது இரட்சிப்புக்குள்ளாக நடத்தும் வரை நீ கதறி அழுது ஜெபிப்பதை நிறுத்தக்கூடாது என்று அவர் எழுதியுள்ளார். இந்த வாஞ்சை அவருடைய உள்ளத்தை நிரப்பி இருந்ததால் அநேக ஆத்துமாக்களை கர்த்தரண்டை வழிநடத்த முடிந்தது.
அநேக நேரங்களில் நமது ஜெபங்கள் ஒரு சம்பிரதாயமாகவே காணப்படுகின்றது என்று சொல்லலாம். ஒரு ஜெபக்கூட்டம் என்றால் இன்னஇன்ன குறிப்புகளுக்கு ஜெபிக்க வேண்டும் என்று ஒரு விதியாக உள்ளது என நினைத்து ஜெபித்து வருகின்றோம். ஆத்துமாவில் ஒரு மனிதன் உடைந்து நொறுங்காத பட்சத்தில் ஜெபவாழ்வில் அவனை எடுத்து பயன்படுத்த முடியாது என்று லியானார்ட் ரோவன்ஹில் என்ற தேவமனிதர் எழுதுகின்றார். தனியறையில் அந்தரங்க ஜெபத்தில் அழிந்து போகும் ஜனங்களை குறித்து பாரப்படுகிற மனிதர்களை தேவன் தேடிக் கொண்டிருக்கிறார்.
இன்றைய தியானச் செய்தியின் மூலம் பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் இடைபடுகிறார். இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். கருத்தாக ஜெபம் பண்ணுங்கள். அதேநேரம் இருதயம் உடைக்கப்பட்டு கண்ணீரோடு ஜனங்களுக்காக ஜெபியுங்கள் என்று கூறுகின்றார். நம்முடைய ஜெப வாழ்க்கையில் இருக்கின்ற மலட்டுத்தன்மை மாறவும், பாரத்துடன் ஜெபிக்கவும் கிருபைதாரும் ஆண்டவரே என்று கேளுங்கள். அநேக மக்களை கர்த்தரண்டை வழிநடத்தும் ஆசீர்வாதமான பாத்திரமாக ஆண்டவர் உங்களை மாற்றுவார். அவர் நம்மில் பெரிய காரியங்களைச் செய்வார். ஆமென்.
- Bro. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
மீடியாவில் பணியாற்ற அர்ப்பணிக்கப்பட்ட நன்றாக வேலை தெரிந்த நபர்கள் கிடைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864