By Village Missionary Movement
Friday, 13-Oct-2023இன்றைய தியானம்(Tamil) 14.10.2023
ஆழங்களை அறிந்தவர்
"அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்;…” – தானியேல் 2:22
மனிதனோ முகத்தைப் பார்க்கிறான், தேவனோ நம் இருதயங்களை ஆராய்ந்து அறிகிறார். அன்னாள் தனக்கு குழந்தை இல்லையே என்று மிகவும் வேதனைப்பட்டாள். துக்கம் அவளை அழுத்தியது. சுற்றி எந்த சாதகமான சூழ்நிலையும் அவளுக்கு இல்லை. தேவனுடைய சமூகத்தில் அவளுடைய இருதயத்தின் ஆழத்தை, அதாவது அவளுடைய இருதயத்தில் இருக்கிற துக்கத்தை வேதனையை தேவ சமூகத்தில் ஊற்றிவிட்டாள். ஆனால் அதைப் பார்த்த ஏலி அவள் குடித்து வெறித்து இருக்கிறாள் என்று அவளுடைய வெளிப்புறத்தை பார்த்து சொன்னார். ஆனால் அன்னாளுடைய இருதயத்தைப் பார்த்த கர்த்தர் அவளை நினைத்தருளி ஒரு சாமுவேலைக் கொடுத்தார்.
1சாமுவேல் 17ம் அதிகாரத்தில் சாமுவேல், ராஜாவை அபிஷேகம் பண்ண தேடி சென்ற காரியத்தில் ஈசாயின் குமாரர்களின் சரீர பிரகாரமாக உணர்ச்சியைப் பார்த்து அபிஷேகம் செய்ய முற்படுகிறார். ஆனால் தேவனோ மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். நானோ இருதயத்தைப் பார்க்கிற தேவன் என்றார். எனவே தேவன் இந்த இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தாவீதையே தெரிந்துகொண்டு அபிஷேகம் செய்து ராஜாவாக முன் குறிக்கிறார். ஆம், உங்கள் இருதயத்தின் ஆழங்களை அறிந்தவர் கர்த்தர் மட்டுமே.
பிரியமானவர்களே! நீங்கள் சென்று கொண்டிருக்கிற பாதை உங்களை வெளிப்புறமாகப் பார்க்கிற அநேகருக்கு கேலிக்கூத்தாக, உங்களை விமர்சிக்கிறதாக இருக்கலாம். ஆனால் திடன் கொள்ளுங்கள். கர்த்தர் உங்கள் இருதயத்தைப் பார்க்கிறார். நீங்கள் ஒரு கடினமான சூழ்நிலைக்குள்ளே செல்லும் போது மனிதர்கள் அதைப் பற்றி தாங்கள் அறிந்ததைக் கொண்டு உங்கள் முடிவுகளை யூகிப்பார்கள். ஆனால் கர்த்தரை நம்பும் மனிதர்கள்கடக்கும் அக்கின சூளையாகட்டும் சிங்கக்கெபியாகட்டும் அது வித்தியாசமானது! என்பதை பின்னர் புரிந்து கொள்வார்கள். அக்கினி சுவாலை நம்மேல் பற்றாது. கொந்தளிக்கும் தண்ணீரைக் கடக்கும் போதும் அவைகள் நம் மேல் புரளுவதில்லை. ஆம், நம் உள்ளந்திரியங்களை அறிந்த ஆண்டவர் அளிக்கும் பதில் ஆச்சரியமாயிருக்கப்போகிறது. அல்லேலூயா!
- Mrs. திவ்யா பெர்னார்ட்
ஜெபக்குறிப்பு:
கைப்பிரதி ஊழியங்கள் மூலம் சந்திக்கப்படும் நபர்கள் ஒவ்வொருவரும் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864