By Village Missionary Movement
Thursday, 25-Mar-2021இன்றைய தியானம்(Tamil) 25-03-2021
அருகில் இருக்கிறவர்
”தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.” – சங்கீதம் 145:18
ஜேம்ஸ் என்னும் ஒரு வாலிபன் இருந்தான். அவனுக்கென்று யாரும் கிடையாது, ஆண்டவரைப் பற்றியும் அதிகம் தெரியாது. தினமும் மதியம் சாப்பிடும் நேரத்தில் அருகில் உள்ள தேவாலயத்திற்கு சென்று “இயேசப்பா நான் ஜேம்ஸ் வந்திருக்கேன்” என்று சொல்லிவிட்டு சென்று விடுவான். இதே போல் தினமும் மனதார, உண்மையாய் செய்து வந்தான். ஒருநாள் காலை வேலைக்கு செல்லும்போது விபத்தில் அவன் காலில் பலமாய் அடிபட்டது. அருகில் இருந்தவர்கள் அவனைக் கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அரசு மருத்துவமனையின் மதிய சாப்பாடு அருகிலுள்ள சின்ன மேஜையில் வைக்கப்பட்டது, அவன் இருதயம் அந்த தேவாலயத்தின் மேல் சென்றது. இந்த நேரத்தில் நான் இயேசுவைப் பார்க்கப் போவேனே இன்றைக்கு போக முடியவில்லையே என்று யோசித்தபடியே கண் அயர்ந்தான். அவன் இருந்த அறையில் ஒரு ஒளி வீசியது. அதில் இருந்து ஒரு சத்தம், “ஜேம்ஸ் நான் இயேசு கிறிஸ்து வந்திருக்கிறேன்” என்பதாக, உடனே அவனுக்குள் சந்தோஷம் வந்தது, அந்நேரமே பூரண சுகத்தைப் பெற்றுக்கொண்டான். அவனது தரிசன கண்கள் திறக்கப்பட்டது.
வேதாகமத்தில் சாமுவேலைப் பற்றிப் பார்க்கிறோம். அவர் சிறு குழந்தையாக இருக்கும்போதே, ஆலயத்தில் விடப்பட்டார், அங்குதான் வளர்க்கப்பட்டார். அவன் கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாய் நடந்து கொண்டார். கர்த்தருடைய பணிவிடைகளை உண்மையாய் செய்து கொண்டு வந்தார். கர்த்தர் அவரைத் தேடி வந்து “சாமுவேலே, சாமுவேலே” என்று பெயர் சொல்லி அழைத்தார். ஆம், அவர் தம்மை உண்மையாய் தேடுபவர்களை தேடி வரும் தெய்வம்.
ஆம், இயேசு கிறிஸ்துவைத் தேடி நாம் செல்ல வேண்டியதில்லை அவர் நம்மை தேடி வருபவர். நம் அருகிலேயே இருப்பவர். நம்மை பெயர் சொல்லி அழைப்பவர். உண்மையாய் அவரை நேசிப்பவர்களின் அருகில் இருப்பார். நீங்கள் தனிமையில் இருக்கும்போதும், ஆதரவு இல்லாமல் இருக்கும்போதும், அவரை உண்மையாய் கூப்பிட்டால் உங்கள் சத்தத்தைக் கேட்டு எங்கு எந்த சூழ்நிலையில் இருந்தாலும் உங்களுக்கு உதவிட உங்களை விடுவிக்க அவர் வருவார். இன்றே அவரை நோக்கி கூப்பிடுவீர்களா? பதில் தருவார் நிச்சயம்.
- Mrs. அக்சாள் சுகதேவ்
ஜெபக்குறிப்பு:
இராக்லாந்து வேதாகமக் கல்லூரிக்கு வட மாநிலங்களிலிருந்து மாணவர்கள் வந்து இணைய ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250