By Village Missionary Movement
Sunday, 08-Oct-2023இன்றைய தியானம்(Tamil) 09.10.2023
கீழ்ப்படிந்த ஆபிரகாம்
"…நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ" - ஆதியாகமம் 12:1
ஏமிகார்மைக்கேல் அம்மா அவர்கள் சிறுவயதில் இருக்கும்போது அவருடைய கருவிழிகள் அந்த நாட்டிலுள்ள மக்களுக்கு இருக்கும் ப்ளு கலர் கண்விழிகளைப் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக கறுப்பு விழிகளாக இருந்தது. இதனால் ஏமி தனது அம்மாவிடம் ஏன் எதற்கு எனக்கு மட்டும் கறுப்பு விழிகள் என அடிக்கடி கேட்பாராம். அதற்கு ஏமியின் தாயார் சொன்ன பதில் நீ இயேசப்பாவிடம் ஜெபி என்று. ஜெபித்து முடித்து மறுநாள் காலையில் கண்ணாடியில் பார்த்தால் அவருடைய கண்விழிகள் சற்றும் மாறாமல் இருந்தது. தனது அம்மாவிடம் இதனை தெரிவித்த பின்பு, தாயார் சொன்ன பதில் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏமி நம் மக்களிடமிருந்து உன்னை ஆண்டவர் வித்தியாசமாக படைத்ததற்கு ஒரு நோக்கமுண்டு. வித்தியாசமாக படைத்த ஆண்டவர் உன்னை வித்தியாசமாகவே பயன்படுத்துவார் என்று. ஆண்டவருடைய சத்தத்துக்கு கீழ்ப்படிந்த ஏமி இந்தியாவுக்கு வந்தார். திருநெல்வேலி டோனாவூர் பகுதியில் சிறு பெண் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தார். மேலும் பல சமூக சீர்திருத்தங்களையும் மேற்கொண்டார். அவரால் தொடங்கப்பட்ட பள்ளி அநேக மிஷனெரிகளின் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்கி சமுதாயத்தில் நல்ல பல மனிதர்களை இன்றும் உருவாக்கிக் கொண்டுதான் உள்ளது.
வேதத்தில் விசுவாச தகப்பனாகிய ஆபிரகாமை அறிவோம். கர்த்தர் ஆபிரகாமை அழைக்கும் போது, உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டு புறப்பட்டு நான் உனக்கு காண்பிக்கும் தேசத்துக்கு போ (ஆதி.12:1) என சொல்கிறார். ஆபிரகாம் கீழ்ப்படிந்ததினால் தேவன் அவரை பெரிய செல்வ சீமானாக மாற்றி அவருடைய சந்ததியை ஆசீர்வதித்தார்.
தேவபிள்ளைகளே, இன்று நாம் நம்மை தேவனுக்கு கீழ்ப்படிய ஒப்புக்கொடுக்கும் போது நம்மையும் அவர் பயன்படுத்துவார். ஆபிரகாமை அழைக்கும் போது ஆபிரகாமுக்கு From address மட்டுமே இருந்தது. To address அதாவது எங்கே போகிறோம் என்று கூட தெரியாது. ஆனால் ஆபிரகாம் கீழ்ப்படிந்ததினால் விசுவாசத்தின் தகப்பன் ஆனார். இதை வாசிக்கின்றதான உங்களை தேவன் ஊழியத்திற்கென்று அழைத்திருப்பார் என்றால் அவருடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்தீர்களா? உடனே அவருடைய சத்தத்துக்கு கீழ்ப்படிந்து முழு உலகத்திற்காகவும் அழுது கொண்டிருக்கிற ஆண்டவருடைய கண்ணீரை துடைக்க இன்றே முன் வருவீர்களா?
- Mrs. ரூபி அருண்
ஜெபக்குறிப்பு
பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்தின் மூலம் சந்திக்கப்படும் ஒவ்வொரு நபர்களும் இயேசுவின் அன்பை ருசிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864