By Village Missionary Movement
Friday, 06-Oct-2023இன்றைய தியானம்(Tamil) 07.10.2023
நன்மைக்கு ஏதுவாக
"…தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச்சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” - ரோமர் 8:28
எத்தனையோ இயேசுவின் பக்தர்கள், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள், தேவனிடத்தில் அன்புகூருகிற சிறியவர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் வாழ்வில் ஏதாவது கஷ்டங்கள், நஷ்டங்கள், துன்பங்கள், உபத்திரவங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. அவை அனைத்தும் பிற்காலங்களில் அவர்களுக்கு நன்மைக்கேதுவாகவே அமைகிறது.
D.L. மூடி என்ற எழுப்புதல் பிரசங்கியாரின் வீடு, சர்ச், சிகாகோ நகரில் உள்ள இவருடைய சொத்துக்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்தன. மிகவும் சோர்வுற்ற D.L. மூடி, மனிதர்களிடம் உதவியை நாட விருப்பம் கொண்டார். ஆனால் தேவன் நான் உனக்கு இல்லையா? என்று கேட்டதும், மனிதர்களை நம்பாமல் தேவனையே சார்ந்திருந்ததால் மிகப்பெரிய ஆசீர்வாதங்களை ஊழியத்தின் பாதையில் கண்டடைந்தார்.
வில்லியம்கேரி இந்தியாவின் தலைசிறந்த மிஷனெரியாக விளங்கினார். இவருடைய கடின உழைப்பால் உருவான மொழிபெயர்ப்புகள், வேதாகமமாக வெளிவரும் சூழ்நிலையில் தீக்கிரையாயின. அச்சுக் கூடமும் எரிந்தது. மனைவியும் பைத்தியமானார்கள். எதிலும் சோர்வடையாமல் தன் பணியில் தொய்வில்லாமல் முன்னேறிச் சென்றார். மேலும் சிறப்பான முறையில் 18 மொழிகளில் தேர்ச்சி பெற்று வேதாகமம், ஆவிக்குரிய புத்தகங்கள், கைப்பிரதிகள் வெளிவர கர்த்தர் அவருக்கு உதவினார்.
வேதத்திலும் யோபு பக்தர் எல்லாவற்றையும் இழந்து எல்லாம் முடிந்தது என்ற நிலைக்கு வந்தார். ஆனாலும் என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்ற விசுவாச அறிக்கையிடுகிறார். இறுதியில் இரட்டிப்பான நன்மையை பெற்றார். நகோமி பெத்லகேமில் பஞ்சம், எல்லாம் இழந்த நிலை செய்வதறியாமல் மோவாப் செல்கின்றனர். தேவன் இங்காவது ஒரு வழி வைத்திருப்பார் என நம்பினாள். பின் இங்கு கணவன் பிள்ளைகளை இழந்து ஒரு மருமகளோடு இரண்டாவது முறை இருளான சூழலில் வருகின்றனர். ஆனாலும் ஏதோ ஒரு நன்மை உண்டாகும் என நம்பியிருந்தனர், செயல்பட்டனர், நன்மை உண்டாயிற்று. தன் மருகளின் மகனை தன் மகனாய் வளர்க்கும் பாக்கியம் பெற்றாள்.
அன்பானவர்களே! தேவசித்தப்படி அர்ப்பணித்துஅவர்மேல் நம்பிக்கையாயிருந்தவர்கள் வாழ்வில் ஒரு போதும் தீமையான காரியம் முடிவாய் இருந்ததே இல்லை. எத்தனை பேர் சதி செய்தாலும் எல்லாம் இழந்தாலும் சர்வவல்லவர் எல்லாவற்றையும் நன்மையாகவே மாற்றுவார்.
- Mrs. பாத்திமா செல்வராஜ்
ஜெபக்குறிப்பு
நம் வளாகத்தில் செயல்படும் மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்கித்தரும் நபர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864