By Village Missionary Movement
Thursday, 05-Oct-2023இன்றைய தியானம்(Tamil) 06.10.2023
நன்மையான ஈவு
"மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்." - நீதிமொழிகள் 18:22
வாலிபர்களாகிய அநேகரின் கனவு நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல வாழ்க்கைத்துணை என்பதுதான். "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று சிலாகித்து சொல்லப்படுகிறதும் உண்டு. நல்ல மனைவி அமைகிறதும், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைகிறதும் தேவனுடைய ஆசீர்வாதமே. ஆண்டவர் அதற்குத்தான் திருமணம் என்ற பந்தத்தை உருவாக்கினார். ஒருவருக்கொருவர் துணையாக வாழ்ந்து ஆண்டவரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழும்போது ஆண்டவர் அருமையான குழந்தை செல்வங்களை கொடுத்து குடும்பம் என்ற பூங்காவை உருவாக்குகிறார். ஆதாமை உருவாக்கி தேவன் அவன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்று அவனுக்கு துணையாக இருக்கும்படி விலா எலும்பிலிருந்து ஏவாளை அவனுக்கு ஏற்ற துணையாய் ஏற்படுத்தி கொடுத்தார். ஆபிரகாமிற்கு ஏற்ற துணையாய் சாராளையும், ஈசாக்குக்கு துணையாய் ரெபெக்காளையும் ஏற்ற காலத்தில் இருவரையும் இணைத்தார்.
ஒருவனுக்கு ஒருத்தியையும், ஆணும் பெண்ணுமாய் படைத்தது தேவபக்தியுள்ள சந்ததிகளை பெற்று பூமியை நிரப்புவதே தேவனுடைய திட்டமாயிருக்கிறது. ஆனால் தற்போது வாலிப பிள்ளைகளிடையே "திருமணம்" என்ற புனிதமான வாழ்க்கை ஒப்பந்தம் தேவையில்லை என்ற கருத்தும், நம் கண்ணும் மனதும் விரும்பிய வாழ்க்கையை வாழலாம் என்ற எண்ணமும் பரவி கொண்டிருக்கிறது. இது வஞ்சக சாத்தானின் மாம்ச சிந்தையான மரண குழி. "விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளது" (எபிரேயர் 13:4) ஆம், திருமண பந்தத்தை மீறிய உறவுகள் யாவும் தேவனுடைய பார்வையில் விபச்சாரமும், வேசித்தனமுமாகும். பிசாசின் மறறொரு கண்ணி “living together ” என்னும் வஞ்சக வலையில் சிக்கி கொள்ளாமல் தப்பித்துக்கொள் கண்மணி பிள்ளையே!
ஆகவே அன்பு வாலிபப் பிள்ளைகளே! நீங்கள் உங்கள் திருமண வாழ்வை குறித்து சிந்தித்து, உங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணையை ஏற்ற காலத்தில் தேவன் தரும்படி தேவனிடம் மன்றாடி அவரிடம் ஒப்படைத்துவிடுங்கள். "மின்னுவதெல்லாம் பொன்னல்ல" என்பது போல் கண்ணுக்கு இனிமையானவர்கள் எல்லாம் உங்கள் வாழ்க்கைக்கு ஏற்றவர்களல்ல. திருமண பந்தம் என்ற உறவுக்கு உட்படாமல் வாழ உங்களை யாரிடமும் ஒப்படைக்காதீர்கள். இதனால் நித்திய ஜீவனை இழந்து போவீர்கள். தேவன் தாமே உங்களுக்கு தம் நல்ல ஈவாகிய ஏற்ற துணையை கொடுத்து ஆசீர்வதிப்பாராக.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு
ஆமென் வில்லேஜ் டிவி சாட்டிலைட் சேனலாக மாற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864