Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 04.10.2023
Share:

By Village Missionary Movement

Tuesday, 03-Oct-2023

இன்றைய தியானம்(Tamil) 04.10.2023

 

தேவனின் பார்வையில் நீங்கள்

 

"நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள் போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள்” - சங்கீதம் 68:13

 

தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் சித்தன்பூண்டி என்ற சிறிய கிராமத்தின் வெளிப்பகுதியில் பல ஏக்கர் மதிப்புள்ள புறம்போக்கு நிலம் இருந்தது. சாதாரண மண் மற்றும் பாறைகளை விட இந்த நிலத்தின் மண் மற்றும் பாறையின் தன்மை வேறுபட்டு இருந்ததால் யாருமே அதை கண்டு கொள்ளவில்லை. ஆனால் பாருங்கள் மண்சார்ந்த அறிவியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் சிலர் இந்த மண் மற்றும் பாறைகளின் தன்மையை ஆராய்ந்து பார்த்ததில் ஒரு பெரிய விஞ்ஞான உண்மை வெளிப்பட்டது. அது என்னவென்றால், இந்த ஊரின் மண் மற்றும் பாறைகள், நிலவில் காணப்படும் மண் மற்றும் பாறைகளோடு 99% ஒத்தது என்பதாகும். இந்த தகவல் நமது இந்திய நாட்டின் விண்வெளித் துறையை சேர்ந்த இஸ்ரோவிற்கு தெரியவரவே அவர்கள் விஞ்ஞானிகளை அனுப்பி அந்த ஊரின் மண் மற்றும் பாறைகளை தங்கள் ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்தனர். இஸ்ரோ சுமார் 50 டன் மண்ணை அங்கிருந்து எடுத்துச் சென்றது. ஆச்சரியப்படும் காரியம் என்னவென்றால் கடந்த நாட்களில் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் - 3ன் செயல்பாடுகளை நிலவில் அனுப்புவதற்கு முன்பு இந்த மண்ணில்தான் சோதனை ஓட்டம் பார்த்து வெற்றி கண்டனர். தற்போது சந்திராயன் - 3 ம் தனது வேலைகளை நிலவில் செய்து வருகிறது. இந்த காரியத்தினால் இந்தியாவும், தமிழ்நாடும் குறிப்பாக அந்த ஊர் மக்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

 

அன்பானவர்களே, தேவன் உங்களை ஒருபோதும் குறைவாக மதிப்பிடுகிறவரே அல்ல. உங்களை கண்டுகொள்ள யாருமே இல்லை என்று நீங்கள் சோர்ந்து போய் விட்டீர்களா? உங்களுடைய திறமைகள், தாலந்துகள் பயன்படவில்லையே, பலன்கொடுக்கவில்லையே என்று கலங்கி நிற்கிறீர்களா? உங்களையே நீங்கள் நொந்துகொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்து விட்டீர்களா? தேவன் உங்களை பார்க்கும் விதமே வேறு. கேட்பாரற்று கிடந்த மண்ணை ஒரு சில விஞ்ஞானிகள் கண்டு வெளி உலகத்துக்கு கொண்டு வந்து விண்வெளியின் ஆய்வுக்காக பயன்படுத்த முடியுமானால் சர்வ வல்லமையுள்ள தேவன் உங்களை எப்படி எடுத்து பயன்படுத்துவார் என்பதை சற்று சிந்தியுங்கள். தேவன் உங்களைக் குறித்து பெரிய திட்டம் வைத்துள்ளார். அந்தப் பெரிய திட்டம் நிறைவேற எங்களுடைய ஊழியத்தின் ஒரு பகுதியான ஆமென் வில்லேஜ் டிவி க்கு உங்களை வரவேற்கிறோம். உங்களுடைய தாலந்துகள், திறமைகள் எதுவானாலும் அதை தேவநாம மகிமைக்காக வெளியிட நாங்கள் ஆயத்தம்! நீங்கள் ஆயத்தமா? இன்றே எங்களுடன் இணைந்திடுங்கள்! செயல்படுங்கள்!!

- Bro. சங்கர்ராஜ்

 

ஜெபக்குறிப்பு

தமிழ்நாட்டில் ஆலயமில்லாத ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் திருச்சபைகள் கட்டியெழுப்பப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al