By Village Missionary Movement
Sunday, 01-Oct-2023இன்றைய தியானம்(Tamil) 01.10.2023 (Kids Special)
பிங்கோ
“…நன்மை செய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமை செய்கிறவன் தேவனைக் காணவில்லை" - 3 யோவான் 1:11
ஹலோ குட்டீஸ் How are you ? School life எப்படி போகுது. Home work எழுத, துடிடடல யா விளையாட Super- ரா இருக்குதா? சரி உங்களுக்கு யானை என்றாலே ரொம்ப பிடிக்கும்தானே. தும்பிக்கையை தூக்கி, காதை விரிச்சி தலையை ஆட்டி நடப்பதை பார்த்தாலே ரொம்ப அழகாக இருக்கும்தானே! சரி இன்றைக்கு யானையை பற்றி ஒரு கதை கேட்கலாமா?
ஒரு காட்டுக்குள்ளே பிங்கோ என்ற குட்டி யானையும் அதோட அம்மாவும் ரொம்ப சந்தோஷமா வாழ்ந்து வந்தது. யானைக்கு கரும்பு என்றாலே பிடிக்குந்தானே. குட்டீஸ் உங்களுக்கும் பிடித்த உணவு இருக்குது இல்லையா. யானையோட அம்மா, "பிங்கோ குட்டி, கரும்பு நிறையா அடுக்கி வைத்திருந்தால் நீ அந்த பக்கம் போகக் கூடாது. கீழே குழி தோண்டி, மேலே கரும்புகளை அடுக்கி நம்மள ஏமாற்றி கடத்தி கொண்டு போயிடுவாங்க. அதனால நீ கவனமா இருக்கணும்"னு சொன்னாங்க. ஒருநாள் பிங்கோ தன் பிரண்ட்ஸ் கூட ஜாலியா விளையாடிக் கொண்டிருக்கும்போது தூரமான இடத்தில் நிறைய கரும்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை அந்த பிங்கோ பார்த்ததும் கரும்பு சாப்பிட ஆசையாய் இருந்தது. பிரெண்ட் கிட்டேயும் சொல்லாமல் தனியா நடக்க ஆரம்பித்தது. என்ன குட்டீஸ் நீங்களும் எங்கேயும் அம்மா, அப்பாகிட்ட சொல்லாம தனியா போகக்கூடாது. ஆபத்துத்தான் வரும். தெரியாதவர்கள் சாக்லேட் கொடுத்தா வாங்க கூடாது. தனியா கூப்பிட்டு பேசினா போகக்கூடாது. கடத்திக் கொண்டு போய்டுவாங்க. என்ன குட்டிச் செல்லங்களே புரிஞ்சுதா? Ok இந்த பிங்கோவுக்கு என்ன ஆச்சுன்னு கேட்போமா? கரும்பு பக்கத்தில் போகவும் பிங்கோவுக்கு ரொம்ப சந்தோஷம் இன்றைக்கு ஆசை தீர கரும்பு சாப்பிட வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தது. திடீரென்று பொத்தென்று விழுந்தது பாருங்க. பிங்கோ அம்மா சொன்ன மாதிரி குழிதோண்டி வைத்திருந்ததால் ஏமாந்து போனது. சர்க்கஸ்காரன் வந்து நின்றான். நல்ல வேட்டை நமக்கு கிடைத்தது என்று தன் வண்டியில் ஏற்றி கொண்டு போனான். பிங்கோவுக்கு அழுகை அழுகையாய் வந்தது. நம்மை எங்கு கொண்டு போகிறார்களோ என்ற பயம். அம்மா சொன்ன பேச்சை கேட்கவில்லையே! Friends கிட்டேயும் சொல்லாம தனியா வந்துவிட்டோமே என்று கவலைப்பட்டது. சர்க்கஸ்காரன் சங்கிலியால் கட்டி வைத்து பலவித வித்தைகள் செய்யும்படி பழக்குவித்தான். காட்டில் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருந்த பிங்கோ சர்க்கஸ்காரனுக்கு அடிமையாகிவிட்டதை நினைத்து மிகவும் வேதனைப்பட்டது.
என்ன செல்லக் குட்டியே! பிங்கோவின் நிலைமையை பார்த்தால் கஷ்டமா இருக்குதுதானே! அம்மாவுக்கு கீழ்ப்படியாத பிங்கோ சர்க்கஸ்காரனுக்கு அடிமையானதை போல இயேசப்பாவுக்கு கீழ்ப்படியாத பிள்ளைகள் சாத்தானுக்கு அடிமையாகிவிடுவாங்க. ரொம்ப கவனமா இருங்க குட்டீஸ்.
- Mrs. பியூலா
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864