Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  24-03-2021
Share:

By Village Missionary Movement

Wednesday, 24-Mar-2021

இன்றைய தியானம்(Tamil)  24-03-2021

சகலமும் நன்மைக்கே 

“அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” – ரோமர் 8:28

சீன தேசத்தில் ஒரு கிராமத்தில் கர்த்தரை பின்பற்றின ஒரு குடும்பத்தார் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வீட்டில் என்ன நடந்தாலும் “எல்லாம் நன்மைக்குத்தான்” என்று கூறுவார்கள். ஒருநாளில் அவர்கள் வீட்டிலிருந்த ஒரே ஒரு குதிரையும் காணாமற்போனது. இதற்கும் இதே பதிலைச் சொன்னபோது அயலகத்தார் கேலிசெய்தனர். சிலநாட்கள் கழித்து அந்த குதிரை 4 காட்டுக்குதிரைகளை அழைத்து வந்தது. அக்கம்பக்கத்தினர் ஆச்சரியப்பட்டனர். ஒருநாள் ஒரு காட்டுக்குதிரை அந்த வீட்டில் உள்ள வாலிபனை ஒரு “எத்து” விட்டதில் அவனுடைய கால் முறிந்தது. இதுவும் நன்மையே என்று சொல்லுவார்கள் என்று அறிந்து யாரும் விசாரிக்கக் கூட செல்லவில்லை. இந்த சூழ்நிலையில் சீன உள்நாட்டுப் போரில் கலந்துகொள்ளும்படி அனைத்து வாலிபர்களும் வற்புறுத்தப்பட்டனர். கால்கள் முறிந்ததால் படுக்கையிலிருந்த அவனை விட்டுச் சென்றனர். சிலநாட்களில் போர் முடிந்த நிலையில் அந்த கிராமத்திலிருந்து சென்ற அத்தனை வாலிபர்களும் மரித்த செய்தி வந்தது. மொத்த கிராமத்திலேயே மிஞ்சியது இந்த ஒரு வாலிபன்தான். 

வேதம் அப்படியாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவனுக்கே சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது என்கிறது. யார் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்கள்? தேவனையே நம்பி அவரையே எல்லாவற்றிலும் முன் வைத்து அவருக்காகவே எதையும் கொடுக்கவும், இழக்கவும், ஆயத்தமாய் இருக்கிறவர்களே! தேவகட்டளை மற்றும் தேவவார்த்தைக்கு கீழ்ப்படிகிறவர்களாய், எல்லோருக்கும் எல்லா நிலையிலும் நன்மை செய்து வருபவர்களே! தேவன் தன் மீது காட்டின அன்பை பிறரும் உணரும்படியாக மெய் அன்பை வெளிப்படுத்துபவர்களே தேவனிடத்தில் அன்புகூருகிறவர்கள் என்று பார்க்கிறோம்.

என் அருமை நண்பர்களே! தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது. அதை நாம் ஆரம்பத்தில் மனித அறிவால் புரிந்துகொள்ள முடியாது. ஆனாலும் கர்த்தரையே நம்பி அவரையே சார்ந்திருக்கும்போது அதின் முடிவு விளங்கும்! உங்கள் வாழ்விலும் நன்மைகள் தடைபட்டதைபோல தோன்றலாம், ஏன் இது நடக்கவில்லை என்று கலங்கலாம். ஒன்று மட்டும் நிச்சயம். தேவனையே நம்பி அவரையே சார்ந்து அவரிடம் மாத்திரம் தன் காரியங்களை எதிர்பார்க்கிறவன்(ள்) வாழ்வில் சகலத்தையும் தேவன் நன்மைக்கேதுவாகவே முடியப் பண்ணுகிறார். ஆமென்! 
-    C. பால் ஜெபஸ்டின்ராஜ் 

ஜெபக்குறிப்பு: 
பஞ்சாப் மாநிலத்தில் தடைப்பட்ட ஊழியங்கள் நடைபெற ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking