By Village Missionary Movement
Saturday, 30-Sep-2023இன்றைய தியானம்(Tamil) 30.09.2023
என்னை மாற்றும்
"தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்;…." - 2 தீமோ. 3:5
ஒருநாள் இரவு நேரத்தில் தன் மனைவி மற்றும் காதுகேளாத தன் தாயாரோடு வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார் ஒருவர். அந்த வாகனத்தை அவருக்கே தெரியாமல் போக்குவரத்து காவல்துறையினர் பல கிலோமீட்டர் தூரம் பின் தொடர்நது வந்தார்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில் அந்த வாகனத்தை முந்தி சென்று நிறுத்தினார்கள். பயத்தோடு வாகனத்தை நிறுத்த வாகனத்திலிருந்து இறங்கிய போக்குவரத்து காவல் அதிகாரிகள் இவரைப் பார்த்து வாழ்த்துக்கள் என்று கைகொடுக்கவே, நிம்மதியடைந்தார் அவர். அடுத்து அந்த அதிகாரி சொன்ன தகவல் இன்னும் அவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
அதிகாரிகள் சொன்ன செய்தி இதுதான், "வெகு தூரத்திலிருந்து உங்களின் வாகனத்தை பின் தொடர்ந்து வருகிறோம். நீங்கள் வாகன விதிகளை சரியாக மதித்து ஓட்டி வந்தீர்கள். இது, சாலை பாதுகாப்பு வாரம் என்பதால், உங்களை போல் சாலைவிதிகளை மதிப்போருக்கு பத்தாயிரம் ரூபாய் அன்பளிப்பாக கொடுக்கிறோம். இதோ பிடியுங்கள் அந்த தொகைக்கான காசோலையை" என்றார்கள். அந்த காசோலையை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்ட அந்த சகோதரர் பிரமிப்போடு சொன்ன வார்த்தையை கேட்டு அன்பளிப்பு கொடுத்த அதிகாரிகள் பேரதிர்ச்சியடைந்தார்கள். "இந்த பணம் எனக்கு கிடைத்ததில் சந்தோஷம். இந்த பணத்தில் முதலாவது லைசென்ஸ் வாங்கி விடுகிறேன்" என்றார்.
அப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்த அவரது மனைவி வாகனம் நிறுத்தியிருப்பதையும், காவலர்கள் தன் கணவரை விசாரிப்பதையும் பார்த்தவுடன் தூக்கக்கலக்கத்தோடே சொன்னார்கள், "சார் பிராந்தி குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னு பலமுறை சொன்னேன். இவர் கேட்கவே இல்லை" என்றார். இந்த உரையாடல் ஒன்றும் புரியாத அவனது காது கேளாத தாய் சொன்னாள், "நான் அப்பவே சொன்னேன், திருட்டு வண்டியை ஓட்டக்கூடாது என்று. இப்போ மாட்டிக்கொண்டான்" என்றார்கள். இதைக் கேட்ட காவல்துறையினர் அதிர்ச்சியின் உச்சத்திற்கே போய்விட்டார்கள்.
இதை வாசிக்கின்ற பிரியமானவர்களே! இப்படித்தான் இன்று அநேகர் வெளியில் பார்ப்பதற்கு ஆவிக்குரியவர்கள் போல் இருப்பார்கள். கொஞ்சம் நெருங்கிப் பார்த்தால் அவர்களது சாட்சியற்ற வாழ்வு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும். இப்படிப்பட்ட வாழ்வு வாழ்பவர்களைப் பார்த்து வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள் என்று இயேசுகிறிஸ்து கண்டித்து உணர்த்தினார். அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும். உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். நம்முடைய வாழ்வு இப்படி இருக்கிறதா என சிந்திப்போம். தேவபக்தியின் வேஷத்தை நான் தரித்திருக்கிறேனா, அல்லது மாயமற்ற வாழ்வு வாழ்கிறேனா என சிந்தித்து சீர்படுவோம்.
- Bro. காமராஜ்
ஜெபக்குறிப்பு:
நம்முடைய வளாகத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளின் தேவைகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864