Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 29.09.2023
Share:

By Village Missionary Movement

Friday, 29-Sep-2023

இன்றைய தியானம்(Tamil) 29.09.2023

 

வேதம் வாழ்கிறது

 

"வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” - லூக்கா 21:3

 

1. தலைமுறை தலைமுறையாக மக்கள் வாழ்கின்றனர், மடிகின்றனர், ஆனாலும் வேதம் வாழ்கிறது.

 

2. இராஜ்யங்கள் எழும்பி இராஜ்யங்கள் மறைந்து போயின, ஆனாலும் வேதம் வாழ்கிறது.

 

3. வேதத்தைக் கிழித்தார்கள், எரித்தார்கள், தூஷித்தார்கள், ஆனாலும் வேதம் வாழ்கிறது.

 

4. தகுதியற்றது என்று பரியாசக்காரர்களால் புறக்கணிக்கப்பட்டது, ஆனாலும் வேதம் வாழ்கிறது.

 

5. எத்தனையோ ஆன்மீகவாதிகள் தோன்றி மறைந்தார்கள், ஆனாலும் வேதம் வாழ்கிறது.

 

6. நம் பாதங்களுக்குத் தீபமாக, பாதைக்கு வெளிச்சமாக இன்றும் வேதம் வாழ்கிறது.

 

7. வாலிபருக்கு வழிகாட்டியாக, வயோதிபருக்கு ஆறதலாக இன்றும் வேதம் வாழ்கிறது.

 

8. ஆன்மீக பசியுள்ளோருக்கு உணவாக, தாகத்தோடு இருப்பவருக்கு ஜீவத்தண்ணீராக இன்றும் வேதம் வாழ்கிறது.

 

9. இருளில் இருப்போருக்கு வெளிச்சமாக, பாவிகளுக்கு இரட்சிப்பை கொடுக்கத்தக்கதாக இன்றும் வேதம் வாழ்கிறது.

 

10. விசுவாசிகளுக்கு கிருபையை கொடுக்கத்தக்கதாக, நாம் பரத்திற்கு செல்லும் வழியாக இன்றும் வேதம் வாழ்கிறது.

 

ஆம், காலங்கள் மாறலாம், சூழ்நிலைகள் மாறலாம், ஆனால் வேதவசனமோ மாறாது, அழியாது; என்றென்றும் வாழும். ஆனால் கடைசி நாட்களிலே வேதவசனம் கிடைக்கக்கூடாத ஒரு பஞ்சகாலம் வரப்போகிறது. ஆகவே களங்கமற்ற ஞானப்பாலாகிய வசனத்தை வாஞ்சையோடு வாசிப்போம். தெவிட்டாத இந்த சுவையான தேவ வார்த்தையாகிய உணவை உண்போம், ருசிப்போம்; நாள் முழுவதும் தியானித்து கர்த்தருக்குள் வளருவோம். பரலோகத்தில் வார்த்தையாகிய இயேசுகிறிஸ்துவோடு என்றென்றும் வாழ்வோம். அல்லேலூயா!

- Mr. பாக்கியநாதன்

 

ஜெபக்குறிப்பு: 

பணித்தளங்களில் காணிக்கை சேகரித்து அனுப்புகின்ற தன்னார்வ ஊழியர்கள் அநேகர் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al