Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 28.09.2023
Share:

By Village Missionary Movement

Thursday, 28-Sep-2023

இன்றைய தியானம்(Tamil) 28.09.2023

 

தேவையானது

 

"தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்…" - லூக்கா 10:42

 

பிரான்சில் சேவியர் என்ற மிஷனெரி கோவாவிற்கு 1542 ல் வந்து சேர்ந்தார். வந்துசேர்ந்ததும் முதல் வேலையாக அங்கு பேசப்பட்டு வந்த மொழியை கற்கலானார். சிறைச்சாலைகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்கு இயேசுவின் அன்பு தேவையென உணர்ந்தவராய் அவர்கள் மத்தியில் வேத வசன விதைகளை விதைக்க தொடங்கினார். இவர்கள் இருதயத்தில் விதைத்த வசனங்கள் பலன் கொடுத்தது. அநேகர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர். மேலும் தெருக்கள் வழியாக மணியொன்றை அடித்துக் கொண்டு சிறுவர்களை வகுப்புகளுக்கு வரும்படி அழைப்பு விடுப்பார். அந்த வகுப்புகளில் பங்குபெறும் சிறுவர்களுக்கும் இயேசுவின் அன்பு தேவையென உணர்ந்தார். இவர்களுக்கும் இயேசுவின் அன்பை கற்றுக்கொடுத்தார். சமுதாயத்தில் தேவையுள்ள மக்களுக்கும் உதவிகள் பல செய்தார். தேவையுள்ள மக்களுக்காகவே தன்னை முற்றிலும் அர்ப்பணித்தவராய் இருந்ததினால் அகதிகளாக வருவோர்க்கு மறுவாழ்வு அருள்வது, அமைதியற்ற இடங்களில் சமாதானம் கொண்டுவருவது இவருடைய பணியாய் அமைந்தது.

 

வேதத்தில் 1 சாமுவேல் 1 ம் அதிகாரத்தில் அன்னாளை நாம் அறிவோம். இந்த அன்னாளின் நிலை மற்றும் தேவையையும் நாம் வாசிக்கிறோம். அதே நேரத்தில் கர்த்தருக்கும் ஒரு தேவை ஏற்பட்டது. இந்த அன்னாள் தன்னுடைய தேவையினிமித்தமாக தேவ சமூகத்தில் அழுது புலம்பி, கண்ணீர் வடித்து தன்னுடைய இருதயத்தை ஊற்றிவிடுவதை 1சாமுவேல் 1:15 ல் பார்க்கிறோம். இந்த அன்னாளின் தேவையுள்ள ஜெபம் தேவ சமூகத்தை எட்டினது. அன்னாள், கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, "கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன்" என்று சொல்லி அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள். (1சாமுவேல் 1:20) இந்த சாமுவேல்தான் பின்னாட்களில் தீர்க்கதரிசியாக இருந்தார்.

 

பிரியமானவர்களே, அன்னாளின் கண்ணீரின் ஜெபத்தினால் அன்னாளின் தேவையும், ஆண்டவரின் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டது. இயேசுவின் பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொரு நாளும் நமக்கு தேவையான கிருபைகளுக்காக நல்ல பங்காகிய அவரை தெரிந்து கொள்வோம். மேலும் இந்த உலகில் பலவிதமான பிரச்சனை, கண்ணீர், பாடு, துக்கம் இவைகளிலிருந்து என்னை விடுவிக்க யாரும் இல்லையா என அங்கலாய்ப்போடும், பெருமூச்சோடும் வாழ்ந்து கொண்டிருக்கிற அநேகருக்கு இயேசு தேவை இன்று. யார் நமது காரியமாய் போவான் என்று தேவையோடு அழைக்கிற ஆண்டவருடைய சத்தத்துக்கு பதில் நீங்களும், நானாகவும் இருப்போம்! சிந்திப்போம்! செயல்படுவோம்!!

- Mrs. சக்தி சங்கர்ராஜ்

 

ஜெபக்குறிப்பு: 

குஜராத் மாநில ஊழியத்தின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş