Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 24.09.2023 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 24-Sep-2023

இன்றைய தியானம்(Tamil) 24.09.2023 (Kids Special)

 

மோகனின் மனமாற்றம்

 

"கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது… தேவனுடைய ஈவு" - எபேசியர் 2:8

 

அன்பு குட்டீஸ், எப்படி இருக்கீங்க? முழுவாண்டுத் தேர்வும் நெருங்கிவிட்டதல்லவா? நல்லா படிங்க. சரியா. . . படிக்கிறதிலே, ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிகிறதிலே, பரீட்சை எழுதுவதிலே என எல்லா காரியத்திலும் உண்மையாய் இருக்க வேண்டும். சரியா? உன்னுடைய உண்மையை பார்த்து இயேசப்பா உன்னை ஆசீர்வதித்து உயர்த்துவாங்க. சரி, கதை கேட்போமா?

 

மோகன் அம்மாவிற்கு ரொம்ப செல்லப்பிள்ளை. அவன் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து விடுவார்கள். ஆகவே சிறுவயதிலிருந்தே அம்மாவை ஏமாற்றி ஏமாற்றி காரியத்தை சாதித்து விடுவான். அவன் சற்று வளர்ந்து பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தான். பள்ளிக்கூடத்தில் பேனா,பென்சில், ரப்பர் என திருட ஆரம்பித்தான். 5 -ம் வகுப்புக்கு வந்தான். பிறர் பையிலிருந்து 5ரூ, 10ரூ என்று எடுத்து தான் விரும்பின தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டான். அம்மா கேட்டால் திருட்டை மறைக்க பொய் சொல்லி விடுவான். 8 -ம் வகுப்பு வரும்போது நிறைய கெட்ட நண்பர்கள் கிடைத்து விட்டார்கள். அவர்கள் முன் பந்தா பண்ண, வீட்டிலிருந்து 50ரூ, 100ரூ என்று எடுக்க ஆரம்பித்தான். அம்மா கண்டுபிடித்துக் கேட்டால் அம்மாவைத் திட்டி சண்டை போடுவான். பள்ளிக்கும் ஒழுங்காக செல்வதில்லை. அவன் வளர வளர கெட்ட பழக்கமும் வளர்ந்தது. அவனை திருத்த அம்மா எவ்வளவோ முன்றபோதும் தோல்வியே அடைந்தார்கள். 

 

11 -ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மோகன் திருட்டு கும்பலுடன் சேர்ந்து செல்போன் திருடி விற்க ஆரம்பித்தான். ஒருநாள் அக்கும்பல் மோகனை போலீஸில் காட்டிக் கொடுத்து விட்டு தப்பித்தது. மோகன் சிறைக்குச் சென்றான். அங்கு அடி, உதை, பசி, பட்டினி என பல துன்பங்களை அனுபவித்தான். படிப்பைத் தொடர முடியவில்லையே, வாலிப வயதில் என் பெயர் கெட்டு விட்டதே! என் எதிர்காலம் என்னவாகுமோ என்று கலங்கி தவித்தான். ஜெயிலில் நான்கு சுவருக்கு மத்தியில், தனிமையில் கண்ணீர் மல்க யாராவது என்னை பார்க்க வரமாட்டார்களா என ஏங்கி தவித்தான். அன்றே அவனுடைய தாய் ஒரு போதகரோடு வந்தார்கள். தாயை கண்ணீரோடு பார்த்தான். படிப்பறிவற்ற தாயை எத்தனை முறை ஏமாற்றினேன் என மனதிற்குள் நொந்து கொண்டான். போதகர், ஆண்டவர் தரும் பாவமன்னிப்பையும் இரட்சிப்பையும் குறித்து பேசினார். தேவன் அவன் இருதயத்தைத் திறந்தார். கொஞ்ச நாட்களில் விடுதலையையும் பெற்று நல்ல மனிதனாய் வாழ்ந்தான்.

 

குட்டி தம்பி, தங்காய்! மோகன் அண்ணனைப் போல நீயும் குட்டிக் குட்டி தப்பு பண்ணிக் கொண்டிருக்கிறாயா? நீ திருடுவதை யாரும் கண்டுபிடிக்காததால் தைரியமாயிருக்கிறாயா? ஒரு நாள் நீ கட்டாயம் பிடிபடுவாய். இன்றே மனந்திரும்பி விடு. பொய், திருடு, கெட்டவார்த்தை பேசுவது, காப்பி அடிப்பது எல்லாம் பாவம். இதை நீ சிறுவயதிலேயே விட்டுவிடுவாயானால் உன் வாழ்வு ஆசீர்வாதமாய் மாறும். இல்லாவிட்டால் உன் நல்ல பெயரை நீ இழக்க நேரிடும். ஆகவே இன்றே ஒரு நல்ல தீர்மானத்தை எடுத்து விடு, சரியா?

- Sis.தெபோராள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş