By Village Missionary Movement
Saturday, 23-Sep-2023இன்றைய தியானம்(Tamil) 23.09.2023
மரணத்தினின்று தப்புவிக்குமா
"அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்" - நீதி. 10:2
அநேக ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டன் தேசத்தில் ரூட்ஷெல்டு என்ற பெரிய செல்வந்தர் ஒருவர் வாழ்ந்தார். நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்கு செல்வத்தை குவித்து வைத்திருந்தார். பிரிட்டன் தேச அரசு நிர்வாகத்திற்கே அவர் பணம் கொடுத்து உதவினார் என்றால் பாருங்கள்! ஒருநாள் அவர் திரளான நகைகள், விலையுயர்ந்த கற்கள், பணங்கள் சேமித்து வைத்திருந்த தனது கஜானாவின் அறைக்குள்ளே சென்றார். பணத்தையும், தங்க ஆபரணங்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் கணக்கிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த கஜானாவின் கதவு தானாகவே மூடிக் கொண்டது. அதை உள்ளிருந்து திறக்க முடியாது. கதவை திறப்பதற்கு போராடி பார்த்தார். அவர் எவ்வளவு முயன்றும் கதவை திறக்க முடியவில்லை. சத்தமிட்டுப் பார்த்தார். அவரது சத்தம் வெளியே கேட்கவில்லை சுவாசிக்க காற்றும் போதவில்லை. அந்தோ பரிதாபம்! அங்கேயே மரித்துப் போனார்.
சில சந்தர்ப்பங்களில் இந்த உலகில் நாம் சேர்த்து வைத்திருக்கும் ஆஸ்திகள் நம்மை காப்பாற்றுவதில்லை. அந்த ஆஸ்திகள் நம்மை நித்தியத்திற்கு கொண்டு போய் சேர்க்குமா? நிச்சயமில்லை. நியாயத்தீர்ப்பின் நாள் ஒன்று வருகிறது. அந்த நாளில் மனிதன் சேர்த்து வைத்திருக்கும் ஆஸ்தி அவனை காப்பாற்றாது. வேதம் சொல்கிறது, "ஐசுவரியவான்களே! கேளுங்கள் உங்கள் மேல் வரும் நிர்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள். உங்கள் ஐசுவரியம் அழிந்து உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப் போயின."
வேதத்திலே, கேயாசியைக் குறித்து வாசிக்கிறோம். உலகப்பொருட்களின் மீது, நாகமான் கொண்டுவந்த பரிசு பொருட்களின் மீது ஆசை கொண்டான். தேவனைக் காட்டிலும், அவரது வல்லமையைக் காட்டிலும் உலக ஆஸ்திகளை விரும்பினான். முடிவு குஷ்டரோகம்.
அன்பானவர்களே! ஆஸ்தி அவசியம்தான். ஆனால் நாம் மரிக்கும்போது எதுவும் கூட வரப்போவதில்லை. தேவனே நமக்கு விருப்பமாக இருக்கும்போது சகலத்தையும் நமக்கு தர வல்லமையுள்ளவர்.
- Bro. காமராஜ்
ஜெபக்குறிப்பு
நம்முடைய ஊழியத்தை ஜெபத்தாலும், காணிக்கையினாலும் தாங்கும் ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864