By Village Missionary Movement
Friday, 22-Sep-2023இன்றைய தியானம்(Tamil) 22.09.2023
தப்பித்துக் கொள்ள தீவிரப்படு
"கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்" - ஏசாயா 55:6
கோழிக்கடை ஒன்றில் அநேக கோழிகள் இரும்பு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருந்தன. அந்தக் கூண்டுக்குள் கோழி, சேவல் இரண்டும் ஆனந்தமாக கூவிக் கொண்டே இருந்தன. தனது உரிமையாளரான கடைக்காரர் தன் கண்களுக்கு முன்னாலேயே தான் வளர்க்கும் கோழிகளைக் கொன்று தனது வாடிக்கையாளர்களுக்கு கறியாக்கிக் கொடுப்பதை அது சொந்தக் கண்களாலேயே காண்கிறது. மற்றொரு கோழியை கொதிக்கும் நீருக்குள் விட்டு அதன் முடியை பின்னி அதை அறுத்துக் கொடுக்கிறான். இப்படிப்பட்ட சம்பவங்கள் எல்லாம் தனக்கும் நேரிடப் போகிறது என்று கோழியும், சேவலும் அறிந்தும், கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஆனந்தமாக கூவிக் கொண்டே இருக்கிறது.
இந்த கோழிகள் நமக்கு ஒரு ஆழ்ந்த சத்தியத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இவ்வுலகில் வாழும் மனிதர்கள் தன் கண்களுக்கு முன்பாக பற்பல விதமான மரணங்களால் தனக்கு அன்பானவர்களும், அருமையானவர்களும் கடந்து செல்வதை கண்ணாரக் கண்டும் அதைக் குறித்து சற்றும் கவலைப்படாமல் தான் மாத்திரம் மரணத்தை காணவே மாட்டோம் என்ற நினைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பிசாசு தனது ஆத்துமாவை சங்காரம் செய்வதற்காக தீட்டிக் கொண்டிருக்கும் மரண ஓசை கேட்காதவனாய் கோழிக் கடையில் கொக்கரித்துக் கூவும் சேவல்போல உலக மாயைகளில் மதிமயங்கி அந்த இன்ப களிப்பில் தன் தலையை நீட்டிக் கூவிக் கொண்டிருக்கிறான் மனிதன்!
இதை வாசிக்கும் அன்பானவர்களே! சிருஷ்டிகராம் தேவனை சந்திக்கவும், நாம் கண்களை மூடும்போது நம் ஆத்தும நேசராம் இயேசுவை சந்தித்து அவரோடு கூட பரலோகில் என்றென்றும் சந்தோஷமாக களிகூரவும், தேவ வார்த்தையின்படி எச்சரிக்கையோடு நம் வாழ்வை அமைத்துக் கொள்ளவும் நம்மை ஒரு விசை அர்ப்பணித்துக் கொள்வோம்! வேதத்தில் கூட "உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கேற்றவைகளை அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்" என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறியுள்ளார் அல்லவா? எனவே இந்த வசனத்தை நினைவில் கொள்ளுவோம். வரும் அழிவுக்கு தப்பித்துக்கொள்ள கவனமாக இருப்போம்!
- Mrs. செல்வா பெஞ்சமின்
ஜெபக்குறிப்பு
கிராமங்களில் ஆலயம் கட்டுவதற்கு முன்வந்துள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்காக ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864