By Village Missionary Movement
Tuesday, 23-Mar-2021இன்றைய தியானம்(Tamil) 23-03-2021
வெளிச்சமாயிருப்போம்!
“நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்;…” – மத்தேயு 5:14
மருத்துவரின் தவறான சிகிச்சையினால் பிறந்து ஆறே வாரங்கள் நிரம்பிய ஃபேனி கிராஸ்பி (Fanny Crosby) தன் இரண்டு கண்களிலும் பார்வையை இழக்க வேண்டிய பரிதாபநிலை ஏற்பட்டது. பூக்களை அவைகளின் மணத்தை வைத்தே என்ன பூ என்று கூறும் திறமை படைத்தவராயிருந்தார். வேதத்தில் பல பகுதிகளை அவரது பாட்டியின் உதவியால் மனப்பாடம் செய்து வைத்திருந்ததால், அது ஆவிக்குரிய வாழ்வில் முன்னேறி செல்வதற்கு பெரிதும் உதவின. இவர் தனது 15-வது வயதில் பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்ந்து, அருமையாக பள்ளி படிப்பை முடித்து, அங்கேயே ஒரு அர்ப்பணமுள்ள ஆசிரியையாக பணிபுரிந்தார். தனது வாழ்வின் மூலம் தேவ நாமத்தை மகிமைப்படுத்த அர்ப்பணித்த இவர் 8000-க்கும் மேலான கிறிஸ்தவ பாடல்களை இயற்றி இசை அமைத்து மேதையானார். இவர் எழுதிய பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சபைகளில் இன்றளவும் பாடப்பட்டு வருகிறது. இரண்டு கண்களின் பார்வையும் இழந்த இவர் அநேகருக்கு பல உதவிகள் செய்து வெளிச்சத்தின் மகளாய் வாழ்ந்தார். இவரது பாடல்கள் மூலமாக அநேகர் இயேசுவின் வெளிச்சத்தினிடத்தில் சேர்க்கப்பட்டார்கள்.
பரிசுத்த வேதாகமத்தில் இயேசுகிறிஸ்து எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது ஒரு குருடனுக்கு பார்வையை கொடுக்கிறார். இந்த குருடன் ஆண்டவரிடமிருந்து பார்வையை பெற்றுக்கொண்டவுடன் தன்னுடைய வீட்டிற்குக்கூட செல்லாமல், தனக்கென்றும் வாழாமல் இயேசுவுக்கு பின்சென்று அவருக்காய் வெளிச்சத்தின் பிள்ளையாய் வாழ ஆரம்பித்தான். இதனைக் கண்ட ஜனங்கள் தேவனைப் புகழ்ந்தார்கள்.
ஆம் பிரியமானவர்களே! உலகத்தை தன்னுடைய கண்களால் பார்க்க முடியாத ஃபேனி கிராஸ்பியை உலகமே வியப்போடு பார்க்கும் அளவிற்கு அவருடைய வாழ்வை இயேசு வெளிச்சமாய் மாற்றினார். வழியருகே உட்கார்ந்து பிச்சைகேட்டுக் கொண்டிருந்த குருடனுடைய வாழ்வைக் கண்டு அநேகர் அவனுக்குள் இருந்த வெளிச்சத்தைக் கண்டு தேவனை மகிமைப்படுத்தினார்கள். இந்த உலகத்தில் அநேகர் இன்றளவும் இயேசு என்கிற வெளிச்சம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். பாவம், சாபம், வியாதி, கண்ணீர், போராட்டங்கள் என்பவைகளாகிய இருளில் நாளுக்கு நாள் மடிந்து வருகின்றனர். நம்மை இருளிலிருந்து மீட்டு இரட்சிப்பு என்கிற வெளிச்சத்தினிடத்திற்கு திருப்பியது போல, நாமும் அநேகரை வெளிச்சத்தினிடத்திற்கு கொண்டு வருவோம். அவர்களையும் வெளிச்சத்தின் பிள்ளைகளாய் மாற்றுவோம். அல்லேலூயா!
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
ஒடிசா நாராயண பட்னா பகுதியில் பொறுப்பெடுத்து நடத்தும் ஆவிக்குரிய தலைவர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250