Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 13.09.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 13-Sep-2023

இன்றைய தியானம்(Tamil) 13.09.2023

 

ஜீவனுள்ள வார்த்தை

 

"தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும்…” - எபிரெயர் 4:12

 

பிரசித்தி பெற்ற தேவஊழியர் ஜான்வெஸ்லி அவர்கள் ஒருநாள் நடு இரவைத் தாண்டி குதிரையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கடுமையான குரல் "நிறுத்து" என்று கூறுவதைக் கேட்டார். குதிரையை நிறுத்தியபோது ஒரு திருடன் கையிலிருக்கும் பணத்தை கேட்டான். பணத்தை கொடுக்காவிட்டால் உயிரை எடுப்பதாக கத்தியை காட்டி மிரட்டினான்.

 

வெஸ்லி தன் கையிலிருந்த சில காசுகளை அவனிடம் கொடுத்தார். அவன் அதிக பணத்தை வேறு எங்காவது ஒளித்து வைத்திருப்பாரென்று அந்த குதிரையில் தேடியபோது சில புத்தகங்களை மட்டும் கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி ஓட ஆரம்பித்தான். வெஸ்லி அந்த திருடனை பார்த்து, "நில் உனக்கு தருவதற்கு என்னிடம் ஒன்று இருக்கிறது" என்று கூறினார். வெஸ்லி கிறிஸ்துவின் அன்பு நிறைந்தவராக அவனிடம், "இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி உன்னை சுத்திகரிக்கும்" என்று கூறினார். சில வருடங்கள் கழித்து வெஸ்லி சாயங்கால ஆராதனைக் கூட்டத்தை முடித்து வெளிவரும்போது அநேகர் அவரை காண வேண்டும் என்று முந்தியடித்து கொண்டிருந்த வேளையில், அதில் ஒரு மனிதர் எப்படியாவது அவருடன் பேச வேண்டும் என்று காத்திருந்தான். தருணம் கிடைத்தபோது அவன், "அந்த திருடன் நான்தான்" என்றும் "இப்போது தான் ஒரு தொழிலதிபர்" என்றும் எல்லாவற்றிற்கும் மேலாக "தான் தேவனின் பிள்ளை" என்றும் கூறினான். பின்னும் அவன், "ஐயா நீங்கள் அன்று அந்த வார்த்தைகளை சொல்லாதிருந்தால் நான் இன்னும் திருடனாகவே இருந்திருப்பேன்" என்றும் கூறினான்.

 

எபிரரெயர் 4:12ல் இப்படியாக வாசிக்கிறோம். "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும், வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும் ஆத்துமாவையும் ஆவியையும் கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும் இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது" என்று.

 

ஆம், பிரியமானவர்களே! தேவனுடைய வார்த்தையை நம்மால் இயன்ற அளவு பிறருக்கு கூறுவோம். தேவனுடைய வார்த்தைகளை நாம் சொல்லும்போது ஞானத்தோடு சொல்ல வேண்டும். ஏனென்றால் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகள் எப்பேர்ப்பட்ட மனிதனையும் தேவனிடம் ஈர்க்கக்கூடியது. அது மட்டுமன்றி அவர்களுடைய வாழ்க்கையையும் முற்றிலும் மாற்றக் கூடியது. ஆகவே சொல்ல வேண்டியவர்களுக்கு கர்த்தருடைய வார்த்தையை தேவ ஞானத்தோடு ஜெபித்து சொல்லுவோம்! கர்த்தர் நிச்சயம் கிரியை செய்வார்!

- Mrs. சக்தி சங்கர்ராஜ்

 

ஜெபக்குறிப்பு:

நம்முடைய வளாகத்தில் செயல்படும் மருத்துவமனை மூலம் சந்திக்கப்படும் நபர்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al