By Village Missionary Movement
Monday, 11-Sep-2023இன்றைய தியானம்(Tamil) 11.09.2023
தியாக காணிக்கை
"…உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” - 2 கொரி. 9:7
காடுகளில் வசிக்கும் கடவுளை அறியாத மக்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதற்கு உதவி செய்பவர்கள் உங்கள் காணிக்கைகளை கொடுக்கலாம் என்ற அறிவிப்பு ஒரு ஆலயத்தில் கொடுக்கப்பட்டது. சபை மக்கள் அனைவரும் அமைதியாக இருக்கும் நிலையில், ஆலயத்தில் ஒரு மூலையில் இருந்த மாஹி என்ற சிறுமி முன்னே வந்து தான் ஊன்றி நடக்க வைத்திருந்த இரண்டு கைக்கோல்களையும் காணிக்கை தட்டில் வைத்தாள். இதை 600 டாலருக்கு ஏலம் எடுத்து அவளுக்கே திருப்பி கொடுத்தார், ஏலம் எடுத்தவர். இதைப் பார்த்த மற்றவர்களும் தியாகமாய் தேவபணிக்கு கொடுக்க முன்வந்தனர். இதைக் கொண்டு வின்சென்ட்ஃபெரா என்ற மிஷனெரி 21 ஆண்டுகளாக ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி போன்ற பல நாட்டவரை இரட்சிப்பின் பாதையில் வழிநடத்தினார்.
லூக்கா 21 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் அந்த ஏழை விதவை தன்னிடம் இருக்கிற இரண்டு காசை காணிக்கைப் பெட்டியில் போட்டாள். தன்னிடம் உள்ளதை தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் தேவனுக்கென்று கொடுத்தாள். தன் ஜீவனத்திற்கு உண்டானது எல்லாவற்றையும் கொடுத்து விட்டாள் என கூறினார் இயேசுகிறிஸ்து. தேவனிடம் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டாள்.
கொடுங்கள் அப்பொழுது கொடுக்கப்படும். (லூக்கா 6:38) நாம் சுவிசேஷப்பணிக்கென்று கொடுக்கும் காணிக்கையில் சுவிசேஷம் வேகமாக பரவுகின்றது, தீய குணம் கொண்டோர் சுவிசேஷத்தை கேட்டு இரட்சிப்பை பெற்று கொள்கின்றனர். ஆம், ஒரு பாவி மனம் திரும்புவதினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும். அந்த சந்தோஷத்தில் நீங்களும் பங்குள்ளவர்களாக வேண்டாமா?
ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தாலே அதன் பிரதிபலனை அடையாமல் போவதில்லை என்று வேதம் சொல்லுகிறது. நாம் அவருக்காக தியாகமாய் கொடுக்கும் போது தேவன் நம்மை சும்மா விட்டு விடுவாரோ?
அன்பானவர்களே! கொடுக்கும் காரியத்தில் நம் மனநிலை எப்படி உள்ளது? கொடுக்க எனக்கு ஆசைதான். ஆனால் மீதியாக எனக்கு பணம் இருப்பதில்லையே என்று நினைப்பது தவறு. தேவனுக்கு தேவை இருக்கிறதே என்று நினைத்து நம்மிடம் உள்ளதை அவருக்கென்று தியாகமாய் கொடுப்போம். நிறைவான ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்வோம்.
- Mrs. ரோஸ் பால்செபாஸ்டின்
ஜெபக்குறிப்பு
முழுநேர ஊழியத்திற்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864