Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 09.09.2023
Share:

By Village Missionary Movement

Friday, 08-Sep-2023

இன்றைய தியானம்(Tamil) 09.09.2023

 

வெற்றிக் கொடி

 

"…கற்களைப் பொறுக்கிப் போடுங்கள்; ஜனங்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள்" - ஏசாயா 62:10

 

முற்காலத்தில் ஒருநாடு அடுத்த நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வென்று வரும் பொழுது தங்களுடைய நாட்டுக் கொடியை அப்பகுதியில் ஏற்றிவிட்டு வருவர். அதே போல கர்த்தரும் தம் பிள்ளைகள் மீது முத்திரையிட்டு தம் கொடியை நாட்டுகிறார்.

 

இன்னொரு நாட்டுடன் போரிட்டு வெற்றி பெற்று பின்பு முதலில் அங்குள்ள கொடிகளை அகற்றி தன் நாட்டின் கொடியை உயர்த்தி ஏற்றுவர். அதேபோல், நம்மில் தேவன் முத்திரையிட, கொடியேற்ற நாம் நம்மில் உள்ள கற்களைப் போன்று வலுவான, பிறரை காயப்படுத்தும் நம் பாவங்களை நம்மைவிட்டு அகற்ற வேண்டும். கோபம், எரிச்சல், முறுமுறுப்பு, இச்சை இவைகள்தான் அந்த கற்கள். இவற்றை பொறுக்கி எறிந்து விடும்போது ஆவியானவரின் கொடி நம்மில் ஏற்றப்படும். பாவங்களை விட்டு கர்த்தரின் ஆளுகைக்குள் உங்களை ஒப்புக் கொடுக்கும்போது அவரின் கொடி ஏற்றப்படும். நம் இருதயம் முழுவதும், முழு வாழ்வும் அவர் ஆளுகைக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும். நம் குணம் மாறும். நம்மைக் காண்கிறவர்கள் தேவனின் பிள்ளையென அடையாளம் காண்பர். ஏனெனில் அவரின் கொடி நம்மில் உயர்த்தி ஏற்றப்பட்டு உள்ளது. பாவத்திற்கு நாம் இசையும் போது, கர்த்தரின் ஆளுகைக்கு விட்டு கொடுக்காத போது கர்த்தரின் கொடி நம்மில் ஏற்றப்பட முடியாது. கர்த்தரின் கொடி நம்மில் ஏற்றப்பட்டால் நாம் செய்யும் காரியங்கள் எல்லாவற்றிலும் ஆவியானவர் முன்சென்று அவரே யுத்தம் செய்து, வென்று, நமக்காக அவரே கொடியேற்றுவார். "வெள்ளம் போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்" (ஏசாயா 59:19)  

 

அன்பானவர்களே, நீங்கள் யாருடைய ஆளுகைக்குள் இருக்கிறீர்கள்? எவரின் கொடி உங்களில் உயர்த்தப்பட்டுள்ளது? செய்யும் காரியமெல்லாம் தோல்வியா? சிந்தியுங்கள். இன்று ஆராய்ந்து பார்த்து உங்களை அவருடைய ஆளுகைக்கு ஒப்புக்கொடுங்கள். கள்ளனுக்கு பரதீஸின் வாழ்வு கிடைக்க காரணம், "உம் ராஜ்ஜியத்தில் என்னை நினைத்தருளும்" என ஒப்புக்கொடுத்ததுதான். நீங்களும் ஒப்புக்கொடுங்கள். பரலோகத்தை இந்த உலகத்திலேயே காணலாம். உலகப்பாடு, உபத்திரவங்கள் நம்மை மேற்கொள்ளாமல் உலகத்தை ஜெயித்தவர் உடனிருந்து ஜெயித்து நடத்துவார். அவை நம்மை மேற்கொள்ளாவிட்டால் உலக வாழ்வும் ஒரு பரலோக வாழ்வுதானே.

- Mr. செல்வராஜ்

 

ஜெபக்குறிப்பு:

நமது முழுநேர ஊழியர்களின் குடும்பங்களில் இரட்சிக்கப்படாத நபர்கள் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al