Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  22-03-2021
Share:

By Village Missionary Movement

Monday, 22-Mar-2021

இன்றைய தியானம்(Tamil)  22-03-2021

நீங்களே நற்கந்தங்கள் 

“...நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.” – 2கொரி.2:15

அமெரிக்காவின் 35வது ஜனாதிபதியாக இருந்த ஜான் F. கென்னடி தன் இளவயதில் ஒரு வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்தார். அவர் தன் வேலையை முடித்து வீட்டிற்கு திரும்பும்போது தெருமுனையில் வரும்போதே அந்த தெருவில் உள்ளவர்கள் கென்னடி வருகிறார் என்று கூறி விடுவார்கள். அந்த அளவுக்கு அந்த தெரு முழுவதும் வாசனை வீசுமாம். நாமும் இப்படி உலகத்திற்கு நற்கந்தமாய் வாழ அழைக்கப்படுகிறோம். இதைத்தான் அப்போஸ்தலனாகிய பவுல் கூறும்போது “இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப் போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்” என்கிறார். 

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நம் வாழ்வின் மூலம் அதாவது நம்முடைய செயல்களின் மூலம் வெளிப்படுத்துவதுதான் சாட்சி. நம் செயல்களின் மூலம் இயேசுவை எப்படி வெளிப்படுத்த முடியும்?

அப்பாவின் சாயல் பிள்ளையிடத்தில் தெரிவதால் உன் அப்பா இவரா என்று கேட்கிறோம் அல்லவா? அதைப் போலவே நம் பரம தகப்பனின் சாயல் நம்மில் கென்னடி பயன்படுத்திய வாசனை திரவியத்தின் நற்கந்தத்தைப் போல் வெளிப்பட வேண்டும். அப்போதுதான் நாம் சாட்சிகள். பின்னர் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டு தேவனின் சாட்சிகளாய் வாழ வேண்டும். அப். 1:8-ல் “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து.... பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.” 

நண்பர்களே! இன்றைய உலகில் நாம்தான் நமது சாட்சியின் மூலம் கிறிஸ்துவை உலகிற்கு காட்ட வேண்டும். எப்படி அந்த வாசனை திரவியம் மக்களை கவர்கிறதோ, அதைப்போல நமது சுத்தமான, நல்ல பேச்சு, கனிவான நடக்கை, பிறரை உற்சாகப்படுத்துவது போன்ற குணங்களால் பிறருடைய உள்ளங்களில் இயேசு கிறிஸ்துவை தந்திட வேண்டும். நற்கந்தங்களாக வாழ்வோம்! நாதர் இயேசுவை வெளிப்படுத்துவோம்! 
-    Mrs. ஜாஸ்மின் சாமுவேல்

ஜெபக்குறிப்பு:
ஆந்திரா கும்மா பிளாக் (மண்டலம்) பகுதியில் புதிய பணித்தளம் ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al