Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08.09.2023
Share:

By Village Missionary Movement

Thursday, 07-Sep-2023

இன்றைய தியானம்(Tamil) 08.09.2023

 

இல்லை ஆனால் இருக்கு

 

"…இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு…" - ரோமர் 4:17

 

ஜார்ஜ் முல்லர் என்னும் தேவ ஊழியர் அநேக ஆதரவற்ற பிள்ளைகளுக்கென்று இல்லமொன்றை வைத்து நடத்தியவர். அவர்களின்அன்றாடத் தேவைகளுக்காக கர்த்தர் மேல் உள்ள விசுவாசத்தின் மூலம் அவர்களை போஷித்து வந்தார்.

 

ஒரு நாள் காலை உணவிற்கான நேரம் வந்தபோது, உணவு ஏதுமில்லை. ஏதாவது வாங்க வேண்டுமென்றாலும் கையில் பணமும் இல்லை. அங்கு எல்லா தட்டுகளும் எல்லா டம்ளர்களும் காலியாக இருந்தன. ஆனாலும் எல்லாரையும் இருக்கையில் அமரச் செய்து தலைகளைத் தாழ்த்தி, "எங்கள் தகப்பனே, நீர் எங்களுக்கு கொடுக்க இருக்கும் உணவிற்காக நன்றி" என்று ஜெபித்தார்கள். ஆமென் என்று சொல்லி முடிப்பதற்குள் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அங்கு ரொட்டிகளை செய்பவர் நின்றிருந்தார். அவர் “எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை, உங்களுக்கு சாப்பிட ஒன்றுமில்லை என்று எனக்கு தோன்றிற்று. ஆகவே காலை 2 மணிக்கு எழுந்து உங்களுக்கென்று புதிதாக இந்த ரொட்டிகளைச் செய்தேன்” என்று கூறி ரொட்டிகளை கொடுத்தார்.

 

அவர் சென்ற உடனே மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. திறந்தால் பால் கொடுப்பவர், அவருடைய வண்டி இந்த அனாதை இல்லத்தின் முன்பாக பழுதடைந்து நின்று விட்டது. அதைச் சரிசெய்ய வேண்டுமென்றால் அதிலிருந்து எல்லா பாலையும் வெளியேற்ற வேண்டும். ஆகவே இந்த பாலை வாங்கிக்கொள்ளுகிறீர்களா? என்று கேட்டாராம். கர்த்தர் “எவ்வளவு நல்ல காலை உணவைத் தந்தார்” என்று எண்ணி அனைவரும் வியந்தனர்.

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நீங்களும் கூட இல்லாமையின் வழியாகச் சென்று கொண்டிருக்கலாம். கலங்காதீர்கள். தேவன் வெறுமையாயிருந்த பூமியில் எல்லாவற்றையும் வார்த்தையினால் உண்டாக்கினார். அதைப்போல் பிள்ளையில்லாமல் இருந்த ஆபிரகாம்-சாராளை ஜாதிகளுக்குத் தகப்பன், தாய் என்று அழைத்தார். எத்தனாக இருந்த யாக்கோபை ஆசீர்வதித்து கோத்திரங்களுக்குத் தகப்பனாக மாற்றினார்.

 

நாமும் கூட சந்தோஷம் இல்லை, பணம் இல்லை, நிம்மதி இல்லை என்றெல்லாம் கவலைப்பட்டு கொண்டிருப்போமானால், இன்றைக்கே ஒரு உறுதியான முடிவெடுப்போம். எல்லாவற்றையும் தேவன் தர வல்லவர் என்று அவரை விசுவாசிப்போம். நம்முடைய விசுவாசத்தை ஆண்டவர் நிச்சயம் கனப்படுத்தி தேவையான அனைத்தையும் அருளுவார். எனவே கவலை வேண்டாம். தேவன் பேரில் நம்பிக்கை வைப்போம். ஜெயம் பெறுவோம். ஆமென்!

- Mrs. திவ்யா அலெக்ஸ்

 

ஜெபக்குறிப்பு:

தெபொராள் குழுக்கள் மூலம் நடைபெறும் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al