Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 07.09.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 06-Sep-2023

இன்றைய தியானம்(Tamil) 07.09.2023

 

கல்வாரி அன்பு

 

"கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்;… விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்" - கலாத்தியர் 2:20

 

கிறிஸ்துவின் இரத்தத்தினாலே மீட்கப்பட்டு, அவரை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருந்தால், அவருடைய அன்பு நமக்குள் இருக்க வேண்டும். இன்றைய தியானத்திலே ஏமி கார்மைக்கேல் அம்மையார், " கல்வாரி அன்பு" என்ற தலைப்பின் கீழ் எழுதிய கருத்துக்களை வாசித்து அவைகள் நமக்குள் காணப்படுகிறதா என்று நம்மை ஆராய்ந்து பார்ப்போமா?

  

அன்பற்ற வார்த்தையைப் பேசிவிட்டு, அன்பற்ற சிந்தை கொண்டுவிட்டு, அதைக் குறித்து சிறிது கூட எனக்கு மனத்துயரம் இல்லாதிருந்தால் நான் கல்வாரி அன்பை இன்னும் அறியாதிருக்கிறேன்.

  

சிலருடைய நட்பை இழந்து விடக்கூடாது (அல்லது) அன்புள்ளவன் என்ற என் நற்பெயரை இழந்து விடக்கூடாது என்பதற்காக நான் உண்மையை மனதாரப் பேசுவதற்கு அஞ்சுவேன் என்றால் நான் கல்வாரி அன்பை இன்னும் அறியாதிருக்கிறேன்.

  

சுய அனுதாபம் என்னும் கொடிய துர்குணத்தில் சவுகரியமாய் வீழ்ந்து கொண்டு, என்னைக் குறித்தே எப்போதும் கவலையில் மூழ்கியிருந்து எல்லாவற்றையும் தேவகிருபையின் உதவியோடு தைரியமாய் தாங்கி சகித்துக் கொள்ள முடியவில்லை என்றால் நான் கல்வாரி அன்பை இன்னும் அறியாதிருக்கிறேன்.

  

தித்திப்பான தண்ணீர் நிறைந்த பாத்திரத்தை எப்படி அசைத்தாலும் அதிலிருந்து சிந்தும் தண்ணீரில் ஒரு துளி கூட கசப்பாய் மாறுவதில்லை. அப்படியிருக்க என்னை திடீரென்று குலுங்கச் செய்யும் சந்தர்ப்பம் என்னை பொறுமையற்ற அன்பில்லாத வார்ததைகளைப் பேசச் செய்தால் நான் கல்வாரி அன்பை இன்னும் அறியாதிருக்கிறேன்.

  

என்னை யாரோ அநீதியாய் குற்றம் சாட்டும்போது என்னை நான் அறிந்திருக்கிறதுபோல, அவர்கள் என்னை அறிந்திருந்தார்களானால் இப்போது சாட்டிய குற்றத்தைவிட அதிகமாய் என்னை குற்றம் சாட்ட முடியும் என்ற உண்மையை மறந்து அவர்களிடம் கசப்பு கொள்வேன் என்றால் நான் கல்வாரி அன்பை இன்னும் அறியாதிருக்கிறேன்.

  

பிறரால் கடினமாக நடத்தப்படுதல், தனிமைப்படுத்தப்படுதல், விரும்பாத சூழ்நிலையில் வைக்கப்படுதல் போன்ற கடுமையான காரியங்களுக்கு நான் உள்ளாக வேண்டியது தேவனுடைய ஊழியத்திற்கு (அல்லது) தேவன் என்னை வனைய தேவையாய் இருக்கும்போது, நான் அதைத் தவிர்க்க முயற்சித்தால் கல்வாரி அன்பை இன்னும் அறியாதிருக்கிறேன்.

சிந்திப்போம்! செயல்படுவோம்!

- Mrs. ஜெயந்தி பாக்கியநாதன்.

 

ஜெபக்குறிப்பு:

இம்மாதம் நடைபெற திட்டமிட்டுள்ள சுவிசேஷ முகாம் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet