By Village Missionary Movement
Tuesday, 05-Sep-2023இன்றைய தியானம்(Tamil) 06.09.2023
ஆதாயப்படுத்துங்கள்
"ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” - எபேசியர் 4:32
ஒருநாள் ஒரு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு "போராட்டம்" என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. சிலர் "வாழ்க்கைப் போராட்டம்" என்றும் "போராட்டமும் வன்முறையும்" என்றும் காரசாரமாய் பேசினார்கள்.
விசுவாச மாணவன் ஒருவன், இயேசு கிறிஸ்துவின் அன்பு வழியைப் பின்பற்றிய மார்ட்டின் லூதர், ஆபிரகாம் லிங்கன், மகாத்மா காந்தி இவர்கள் நடத்திய போராட்டத்தின் அடிப்படை நோக்கம், அதன் விளைவுகளை அழுத்தமாக பேசி முதல் பரிசைத் தட்டிச் சென்றான்.
ஏன், ஒரு மோசே இஸ்ரவேல் மக்களைப் பார்வோனிடமிருந்து மீட்டு எடுக்க தேவபலத்தைப் பெறவில்லையா? கானானுக்குள் பிரவேசிக்க பயந்த போது யோசுவாவும் காலேபும் "பயப்பட வேண்டாம்" எனச் சொல்லி வழிகாட்டவில்லையா? தேவனுடைய ராஜ்யம் பரவ, சாத்தானின் ராஜ்ஜியம் முறியடிக்கப்பட வேண்டும்.
பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் குடிகாரர்கள் பெருகி, குழப்பங்கள், சண்டைகள் பெருகியது. அவ்வேளையில், தேவன் ஜான்வெஸ்லியை எழுப்பினார். அவரது செய்தியால் மக்களின் உள்ளம் உடைந்தது. பாவங்களுக்காக கதறி அழுதனர். இங்கிலாந்து நாட்டை மாற்றி அமைக்க, ஒரு வெஸ்லி போதுமென்றால் இந்தியாவை அதின் மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து மீட்டு இரட்சிப்பின் அனுபவத்தை ருசிக்கச் செய்ய "நீ" போதாதா?
சமீப காலங்களில் குடும்பமாகப் பகுதிநேர ஊழியம் செய்பவர்கள் “கூடார ஊழியம்” என்ற அமைப்பின் கீழ் ஊழியம் செய்கின்றனர். இப்படியாக மக்களின் நன்மதிப்பைப் பெற்று நற்செய்தி பரப்புகிறார்கள். அழிந்து போகிற உலகப் பொருட்களினால் பிறரை ஆதாயப்படுத்துங்கள்.
தங்களிடம் நம்பிக் கொடுத்த வேலையைக் குறித்த நேரத்தில் எதிர்பார்ப்புக்கு மேலாகச் செய்து தரும்போது ஆச்சரியப்படுவோருக்கு நற்செய்தியைச்சொன்னார்கள். பண ஆசை இல்லாதவர்களாய் சிறு பள்ளிக் கூடங்கள் ஆரம்பித்து தரமான விசுவாசிகளை வேலைக்கு அமர்த்தி பிள்ளைகளுக்கு சிறப்பாக போதித்து, பெற்றோர்களிடம் அன்போடு பேசி சத்தியத்தை சொல்லி ஆத்தும ஆதாயம் செய்யலாமே!!
"ஆத்தும ஆதாயம் செய்குவோமே இது ஆண்டவர்க்குப் பிரியம் அதினால் ஆசீர்வாதம் பெறுவோம்"
- Mrs. ஜாஸ்மின்பால்
ஜெபக்குறிப்பு:
நமது இராக்லாண்ட் வேதாகமக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864