By Village Missionary Movement
Monday, 04-Sep-2023இன்றைய தியானம்(Tamil) 04.09.2023
உன்னை கீர்த்தியாக வைப்பேன்
"…நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன்…" - செப்பனியா 3:20
16 ம் நூற்றாண்டில் 2ம் பிலிப்பு மன்னன் வேதத்தை வாசிப்பவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க உத்தரவிட்டான். அதிகாரிகள் ஒரு நகரின் மேயர் வீட்டை சோதித்த போது அவர் வீட்டில் ஒரு வேதப்புத்தகத்தை கண்டெடுத்தனர். அது யாரால் வாசிக்கப்படுகிறது என்று கேட்டார்கள். ஒருவரும் ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு வேலைக்காரி நான் தான் வேதாகமம் வாசிக்கிறேன். அது எனது வேதாகமம்தான் என்றாள். மேயர் அவளை காப்பாற்ற மனதுள்ளவராய், அவள் படிப்பறிவில்லாதவள் என்று கூறினார். அதற்கு அந்த வேலைக்கார பெண், அதை வாசிக்க என்னால் முடியும் என்று கூறி வாசித்தாள். அவளை செங்கல் கூட்டுக்குள் அடைத்து மூச்சுத் திணற வைத்து சாகடித்தார்கள். அவளோ வேதாகமத்திற்காக உயிர் நீத்த பெண் என்ற கீர்த்தியை அடைந்தாள்.
வேதத்திலே அநேகர் கர்த்தரால் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைக்கப்பட்டதை வாசிக்கிறோம். மொர்தெகாயின் கீர்த்தி எங்கும் பரவிற்று. ஆம், அவன் உண்மையும், உத்தமுமாய் இருந்து, தன் காரியத்தை நீதியும், நியாயமுமாய் செய்தபடியினால் பெரியவனானான். (எஸ்தர் 9:4) அவனுடைய கீர்த்தி 127 நாடுகளிலும் பிரசித்தமானது. அதேபோல் மோசேக்கு பணிபுரிந்த யோசுவாவின் கீர்த்தியை தேவன் பிரஸ்தாபப்படுத்தினார். மோசேக்கு பின் 20 இலட்சம் இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்த, தேவன் யோசுவாவோடு இருந்து அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்து அவனுடைய கீர்த்தியையும் பரவச்செய்தார். சாலொமோனின் கீர்த்தியையும் தேவன் பரவச் செய்தார். ஞானத்தை கேட்ட சாலமோனுக்கு கேளாத ஐசுவரியத்தையும், ஞானத்தையும் தேவனே கொடுத்தார். மற்ற நாடுகளிலிருந்து ராஜஸ்திரீகள் வந்து அவன் ஞானத்தை கண்டு பிரமித்து சென்றனர். அவருடைய கீர்த்தி எங்கும் பரவிற்று.
ஆம், எனக்கன்பானவர்களே! 19ம் நூற்றாண்டில் உலகப்புகழ் பெற்ற பேரரசரான நெப்போலியனின் கீர்த்தி உலகமெங்கும் பரவியிருந்தது. ஆனால் இன்றோ அந்த கீர்த்தி மங்கி போயிற்று. ஆனால் தேவனாகிய கர்த்தர் தம்முடைய பிள்ளை களை நித்தியகீர்த்தி பெற்றவர்களாக வைக்கிறார். உமது கீர்த்தி எங்கள் மூலமாய் வெளிப்பட கிருபை புரியும் பிதாவே. ஆமென்!
- Mrs. பாத்திமா செல்வராஜ்
ஜெபக்குறிப்பு
தோழமை ஊழியர்கள் மூலம் பணித்தளங்களில் நடைபெறும் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864