Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 01.09.2023
Share:

By Village Missionary Movement

Friday, 01-Sep-2023

இன்றைய தியானம்(Tamil) 01.09.2023

 

EMPTY BOTTLE

 

"துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு,…" - ஆதியாகமம் 21:15

 

காலி பாட்டில் என்றால் வீட்டில் அலமாரியில் ஒரு மூலையில் உருண்டு கொண்டு கிடக்கும். அதை நாம் கவனிப்பது இல்லை. ஆனால் தேவன் காலி பாட்டிலை கண்டு அப்படியே விடுகிறவர் அல்ல. அவர் அதனை கண்ணோக்கி பார்த்து நிரப்புகிறார். அதனைப் பார்ப்போமா?

 

வேதத்திலே ஆகார் ஆபிரகாமை நம்பி இருந்தாள். இறுதியில் சிறிதளவு ஆகாரம், தண்ணீர் கொடுக்கப்பட்டு ஆபிரகாமினால் அனுப்பி விடப்பட்டாள். வனாந்திரத்தில் சுற்றித் திரிந்து துருத்தி தண்ணீரும் காலியானது. பிள்ளை தண்ணீர் குறைவினால் சாகும் நிலைக்கு வந்ததைக் கண்டதும், ஆகார் பிள்ளையை விட்டு தனியே சென்று அழுதாள். தண்ணீர் தாகத்தால் பிள்ளை ஒருபக்கம் அழுதது. தேவன் பிள்ளையின் அழுகைச் சத்தத்தைக் கேட்டார். காலியான துருத்தியையும் கண்டார். மனிதர்களை நம்பும் போது வெறுமை, கண்ணீர்வடிக்க வேண்டிய நிலை வரும். கவனிப்பார் இல்லாமல் மரிக்கும் நிலை கூட வரும். ஆனால் ஆண்டவரோ காலிபாட்டில் என வெறுக்காமல், தள்ளாமல் நம்பிக்கையாய் வாழ வாக்கு பண்ணுகிறார். கையிலிருந்த காலி பாட்டிலை நிரப்ப துரவை வைத்திருந்தார். அவள் துருத்தி நிரம்பினது மட்டுமன்று, ஆகாரின் துரவில் அநேகர் இன்றுவரை தாகம் தீரும்படி ஊற்றை உண்டு பண்ணினார்.  

 

பிரியமானவர்களே! இதைப்போலவே, மனிதர்களை நம்பும்போது ஒருநாள் உங்களை வெறுமையாய் அனுப்பிவிடுவார்கள். நீங்கள் ஆண்டவரை உங்கள் நம்பிக்கையாக கொள்ளாமல், மனிதர்களை, சபையை, போதகரை நம்பியிருந்தால் நீங்கள் காலிபாட்டில்தான். நீங்கள் இன்று நன்றாயிருந்தாலும் ஒரு நாள் உங்களுக்கு ஆகாரின் நிலை வரும். இன்றே உங்களை ஒப்புக்கொடுங்கள், உங்கள் கண்ணீர் துடைக்கப்படும். உங்கள் பாத்திரம் நிரம்பி வழியும்படி செய்வார். அதோடு மாத்திரமல்ல, நீங்கள் அநேகருக்கு ஆசீர்வாதத்தை பகிரும்படி செய்வார்.

 

இவை முற்றும் இலவசமே! ஓ, தாகமாயிருக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் வாருங்கள். இலவசமாய் பெற்றுக் கொள்ளுங்கள் என (ஏசாயா 55:1) கர்த்தர் அழைக்கிறார். நீங்கள் மனிதரை நம்பி Empty bottle ஆகி விட்டீர்களா? இலவசமாய் கொடுக்கிறவரிடத்தில் வாருங்கள். உங்களுக்காக வனாந்திரத்திலும் ஊற்றை உண்டாக்க அவர் வல்லவர். வாருங்கள் நிரப்பப்படுங்கள்.

- Bro. டேவிட் கணேசன்

 

ஜெபக்குறிப்பு

இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருந்து வழிநடத்த ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al