Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 31.08.2023
Share:

By Village Missionary Movement

Thursday, 31-Aug-2023

இன்றைய தியானம்(Tamil) 31.08.2023

 

சிலுவையின் மேன்மை

 

"நானோ... கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக" - கலா. 6:14

 

ஆண்டவருக்காக உண்மையும் உத்தமமுமாய் ஊழியம் செய்யும் ஒரு மூத்த ஊழியரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. உங்களது நூற்றுக்கணக்கான பாடல்கள் பட்டிதொட்டிகளிலும் இன்றும் ஒலிக்கப்படுகிறது. தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒரு மேலான இடத்தைப் பெற்றுள்ளீர்கள். புகழின் உச்சிக்கு சென்றாலும் உங்கள் பெயரைச் சொன்னால் "தாழ்மையுள்ளவர்" என்றே ஊழியர்களும், விசுவாசிகளும் கூறுகின்றனரே இதன் இரகசியம் என்ன? என்று கேட்டனர். தேவஊழியர் சொன்ன பதில், "மேன்மை பாராட்ட என்னிடம் என்ன இருக்கிறது? ஒன்றுமில்லையே, என் குரலை குறித்தும் நான் மேன்மை பாராட்ட முடியாது, ஏனென்றால் நான் பாடற்குழுவில் சேர விரும்பியபோது கழுதைக் குரலுடையவன் என்று விமர்சிக்கப்பட்டவன். ஆகவே என்னிடமுள்ள எல்லாமே ஆண்டவருடையது, என்னிடம் ஒன்றுமில்லை" என்றார்.

      

அப்போஸ்தலனாகிய பவுல், தான் சிலுவையைக் குறித்து மட்டுமே மேன்மை பாராட்டுவதாக கூறுகிறார். இவ்வுலகத்தின் ஆஸ்தி, அந்தஸ்து, பெருமை எல்லாம் சிலுவைக்கு முன்னால் தூசியும், குப்பையுமாக உள்ளது. "நான் கிறிஸ்துவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமும் குப்பையுமாய் எண்ணுகிறேன்" என்று தன் நிருபங்களில் எழுதுகிறார். பவுல் யார்? மிகச்சிறந்த கல்விமான். தன்னைக் குறித்து மேன்மைபாராட்ட வேண்டுமாயின் அவரிடம் பல மேன்மைகள் உண்டு. ஆனால் சிலுவையையும் அதில் தொங்கும் இயேசுகிறிஸ்துவையும் பார்க்கும்போது சிறப்புகள் யாவும் குப்பையாய் மாறிவிட்டன.  

 

அருமையானவர்களே! நாம் நம்மைக் குறித்து மேன்மையாய் எண்ணுகிறோமா? நமது அழகும் ஆடம்பரமும், படிப்பும் பட்டமும், செல்வமும் செல்வாக்கும் நமது மனதை விட்டு நீங்காமலிருக்கிறதோ? அப்படியென்றால் ஒன்று உண்மை, நாம் இன்னும் சிலுவையின் மேன்மையை கடுகளவும் அறியவில்லை என்பதே! தமது உலக மேன்மையையெல்லாம் துறந்து அவமானத்தின் சின்னமாக தொங்கும் கிறிஸ்துவின் தியாகத்தை உணர்ந்த எவரிடமும் மேன்மை பாராட்ட எதுவுமிராது. இப்படிப்பட்ட கிறிஸ்துவின் சிந்தை நம் ஒவ்வொருவரையும் ஆட்கொள்ள மன்றாடுவோம்.

 

         திரண்ட ஆஸ்தி உயர்ந்த கல்வி செல்வாக்குகள் மிக இருப்பினும்

         குருசை நோக்கி பார்க்க எனக்கு உரிய பெருமை யாவும் அற்பமே  

         விந்தை கிறிஸ்தேசு ராஜா உந்தன் சிலுவை என் மேன்மை. 

 

- T. சாமுவேல்

 

ஜெபக்குறிப்பு

தமிழ்நாட்டின் 310 தாலுகாக்களிலும் இரண்டு இரண்டு தெபோராள்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler holiganbet holiganbet giriş holiganbet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet holiganbet giriş perabet meritking meritking giriş meritking meritking giriş pulibet pulibet giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Superbetin superbetin giriş hızlıcasino hızlıcasino giriş perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş Matbet Matbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş jojobet matbet vaycasino marsbahis marsbahis güncel giriş marsbahis giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino jasminbet jasminbet giriş klasbahis klasbahis giriş imajbet imajbet giriş İmajbet nakitbahis nakitbahis giriş vaycasino vaycasino giriş vaycasino güncel giriş matbet matbet giriş matbet güncel giriş yakabet yakabet giriş yakabet güncel giriş betsmove betsmove giriş betsmove güncel giriş betsat betsat giriş betsat güncel giriş safirbet safirbet giriş safirbet güncel giriş dumanbet giriş dumanbet dumanbet güncel giriş vaycasino vaycasino giriş vaycasino güncel giriş marsbahis