Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  21-03-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 21-Mar-2021

இன்றைய தியானம்(Tamil)  21-03-2021 (Kids Special)

one-way – Jesus மட்டுமே 

“...நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்;…” -யோவான் 14:6

அன்பு செல்லங்களே! எப்படி இருக்கீங்க நல்லாயிருக்கீங்களா? Super. புஷ்...ஷ்...ஷ்... என்ற சத்தம் வானத்தில் கேட்டதும், வெளியே ஓடி வந்து, ஐயா Aeroplane பறக்குது, வாங்க, வாங்க அழகா கோடு போட்டுக் கொண்டே போகுது என்று சத்தம் போட்டு எல்லார்கிட்டேயும் சொல்லுவீங்கதானே! Aeroplaneஐ தூரத்தில் பார்க்கும் போதே அவ்வளவு happyயா இருக்கும். அதில் ஏறி பயணம் செய்தால் எப்படி இருக்கும். ஆசையா இருக்கா அதுக்கும் ஜெபம் பண்ணுங்க இயேசப்பா உதவி செய்வாங்க. 

ஒரு Aeroplaneல இரண்டு அண்ணன் பயணம் செய்தாங்க. இரண்டு பேருமே Tiptop ஆக dress போட்டு, ஜம்முன்னு உட்கார்ந்திருந்தாங்க. ஒரு அண்ணன் பக்கத்துல இருந்தவங்ககிட்ட பேச ஆரம்பித்தாங்க. நீங்களும் Travel பண்ணும்போது, School க்கு போகும் போது பக்கத்தில் இருக்கிறவங்ககிட்ட பேசி  friend ஆகிடுவீங்கதானே! ஆமா! அன்பா பேசி மற்றவங்களை விசாரிக்கணும். சரியா.

ஒரு அண்ணன் கேட்டாங்க உங்க பேர் என்ன? என்ன வேலை செய்றீங்க. என் பெயர் கார்த்திக் நான் தொழில் செய்கிறேன் பல தேசங்களில் எங்க தொழில் இருக்கிறது. என் அப்பா கோடீஸ்வரர், எங்களுக்கு நிறைய வேலையாட்கள் இருக்கிறார்கள் என்றார். நீங்க...  என் பெயர் ரமேஷ் நானும் என் அப்பாவுடைய வேலையைத் தான் செய்கிறேன். அவர் பல கோடிகளுக்கு சொந்தக்காரர். எங்களுக்கு உலகமெங்கும் வேலை செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் என்று சொன்னதும் கார்த்திக் அண்ணனுக்கு ஆச்சரியம் எப்படி என்று கேட்பதற்குள் ரமேஷ் அண்ணன் சொன்னாங்க, “நான் மிஷனெரி பணி செய்கிறேன். எங்க அப்பா இயேசுவின் நாமத்தில் வியாதி குணமாகிறது, பிரச்சனை மாறுகிறது, படிக்க ஞானத்தை தருகிறார், கேட்கிறவர்கள் பெற்றுக்கொள்ளும்படி அற்புதம் செய்கிறார். அது மட்டுமா? பரலோக வீட்டிலும் இடம் கொடுப்பார்” என்று சொன்ன ரமேஷ் அண்ணனை வச்ச கண் மாறாம பாத்தாங்க, கார்த்திக் அண்ணா. என்ன இது முற்றிலும் இலவசமா? எனக்கும் கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு பார்த்த கார்த்திக் அண்ணா தன் இதயத்தை திறந்து இயேசுவுக்கு இடம் கொடுத்தார். இயேசுவின் அன்பை இன்னும் சொல்லிக் கொண்டே வந்தார் ரமேஷ் அண்ணன். கேட்க, கேட்க இனிமையாய் இருந்தது கார்த்திக் அண்ணாவுக்கு! விமானம் தரை இறங்கியது. இரண்டு பேரும் பிரிய மனமில்லாமல் கை குலுக்கிக் கொண்டார்கள். 

அருமையான செல்ல குட்டிகளே! இரண்டு பேர் பயணமும் Super ரா இருந்தது தானே! எவ்வளவு கோடிக்கணக்கில், பணம் செல்வாக்கு இருந்தாலும், பரலோகம் செல்ல முடியாது. அங்கு செல்ல ஒரே வழி Jesus மட்டும்தான். என்ன உங்க வாழ்க்கையில் Jesus இருக்காங்களா? Check பண்ணி பாருங்கள். இல்லைன்னா இன்றைக்கே இயேசப்பாவுக்கு இடம் கொடுங்க. பரலோகத்தை விட்டுவிடக் கூடாது. ரொம்ப முக்கியம் Ok. 
-    Sis. தெபோராள்

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al