Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 27.08.2023 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 27-Aug-2023

இன்றைய தியானம்(Tamil) 27.08.2023 (Kids Special)

 

சாருவின் ஜெபம்

 

“அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்" - 1 பேதுரு 5:7

 

அது ஒரு கடலோரப் பகுதி. வறட்சியான கிராமம். அந்த கிராமத்தில் சரியான மின்சார வசதியோ பஸ் வசதியோ கிடையாது. அந்த கிராமத்தில்தான் சாரு என்ற சுட்டிப்பெண் வசித்து வந்தாள். இவள் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி. இவளுக்கு பாடல் என்றால் ரொம்ப பிடிக்கும். நன்றாக ஜெபிப்பாள். இவளுக்கு அண்ணன், அக்கா, தம்பி, தங்கை எல்லாம் உண்டு.

 

ஒரு நாள் இவளது அண்ணன் காணாமல் போய் விட்டான். அவனை எல்லா இடத்திலும் தேடி அலைந்தும் எங்கும் காணவில்லை. அவனை நினைத்து நினைத்து அழுது சாருவின் அம்மாவும் ரொம்ப முடியாமல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மிகவும் மோசமான நிலைக்கு வந்து விட்டார்கள். இதைக்கண்ட சாருவின் அப்பா உள்ளம் சுக்கு நூறாய் நொருங்கியது. ஆஸ்பத்திரியில் உள்ள மனைவியை கவனிப்பதா? காணாமல் போன மகனை தேடுவதா? வீட்டில் உள்ள பிள்ளைகளை கவனிப்பதா? என்று குழம்பி கண்ணீர் வடித்தார். அது டிசம்பர் மாதமாக இருந்தது. விடிந்தால் கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸை சந்தோஷமாக கொண்டாட வேண்டிய வீடு. அந்த நாளில் துக்க வீட்டைப் போல் காணப்பட்டது. இவ்வளவு நடந்தும் கூட அதே ஊரில் உள்ள அவள் உறவினர்கள் யாரும் வந்து இவர்களை விசாரிக்கவில்லை. இந்த நேரத்தில் அந்த சிறுபெண் சாரு முழங்கால்படியிட்டு இயேசுவிடம் ஜெபிக்க ஆரம்பித்தாள். இயேசப்பா எங்க அம்மா உயிரோடு இருக்கும்போதே யாரும் எங்களை கவனிக்கவில்லையே. என் அம்மா செத்து போய்விட்டால் யார் எங்களை கவனிப்பார்கள். என் அம்மாவிற்கு சுகம் தாரும் என் அண்ணன் எங்கேயிருந்தாலும் கூட்டிக்கொண்டு வாரும் என்று கண்ணீரோடு ஜெபித்தாள். என்ன ஆச்சரியம் தெரியுமா? இயேசப்பா இவள் கண்ணீரின் ஜெபத்தை கேட்டு எழும்ப கூட முடியாமல் இருந்த இவள் அம்மாவை எழுப்பி அவர்களுக்கு பூரண சுகத்தை தந்துவிட்டார். அது மட்டுமல்ல இவள் அம்மா சுகமான ஒரு வாரத்திற்குள் அவள் அண்ணனும் வீடு வந்து சேர்ந்து விட்டான்.

 

அன்பு தம்பி, தங்கச்சி நீயும் கூட உன் குடிகார அப்பாவை நினைத்து, உன் குடும்பத்திலுள்ள கஷ்டங்களை மற்றும் வியாதியோடு இருக்கிற உன் குடும்பத்திலுள்ளவர்களை நினைத்து கவலையோடு இருக்கிறாயோ? உன் கவலையெல்லாம் இந்த சாருவைப்போல் இயேசப்பாகிட்ட சொல்லி ஜெபம் பண்ணிடு. அவளுக்கு உதவின இயேசப்பா உனக்கும் உதவி செய்வார். Ok வா.

- Mrs. சாராள் சுபாஷ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al