Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21.08.2023
Share:

By Village Missionary Movement

Monday, 21-Aug-2023

இன்றைய தியானம்(Tamil) 21.08.2023

 

தேவக் கிருபை

 

"நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை" - புலம்பல் 3:22

 

தகுதியில்லாத நமக்கு தேவன் பாராட்டும் தயை தான் கிருபை! இந்த தேவக்கிருபையின்றி நாம் வாழவே முடியாது. இன்றுவரை நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதற்கு காரணம், நாம் செய்த நற்கிரியையா? அல்லது தேவனுடைய கிருபையா? என்று நம்மிடம் கேட்போமானால், 100% தேவக்கிருபையென்றே கூறமுடியும்! இந்த கிருபையைக் குறித்து தேவஊழியர் ஜாய்ஸ் மேயர் அவர்கள் கூறும் காரியங்களைக் காண்போமா?

 

o தேவக்கிருபை என்பது பெற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் விலைக்கு வாங்கக் கூடியதல்ல.

 

o சபை ஆராதனைக்குச் செல்வது, நற்கிரியைகளைச் செய்வது, வேதத்தை தியானிப்பது, தேவனோடு ஐக்கியத்தில் செலவிடும் நேரம் இவைகளில் எதையும் விலையாகக் கொடுத்து, தேவக்கிருபையை வாங்கிவிட முடியாது. அவருடைய கிருபை என்பது முற்றிலும் இலவசமானது.

 

o நம்முடைய தேவைகளையெல்லாம் சந்தித்து, நம்முடைய பிரச்சனைகளையெல்லாம் தீர்த்து வைக்கக்கூடிய தேவனுடைய வல்லமையே கிருபை.

 

o நாளைக்கு நமக்குத் தேவையான தீர்வுகளை, பதில்களை தேவன் இன்றே நம்மிடம் தந்துவிடுவதில்லை. ஒவ்வொரு புதிய நாளும் விடியும் போது தான் அன்றைய நாளில் நாம் எதிர்கொள்ளப் போகும் சவால்களை சந்திக்கவும், பிரச்சனைகளை மேற்கொள்ளவும் தேவையான கிருபையை நமக்குக் கொடுக்கிறார்.

 

அநேக நேரங்களிலே நாம், "இன்று நான் போதுமான நேரம் வேதம் வாசிக்கவில்லையே, அதிகநேரம் ஜெபிக்கவில்லையே, ஆவியின் கனியை வெளிப்படுத்தவில்லையே, குழந்தையிடம் கோபம் கொண்டோமே" என்றெல்லாம் எண்ணி, தேவனுடைய ஆசீர்வாதத்தை பெறுவதற்கான தகுதிகளையெல்லாம் இழந்துவிட்டோம் என எண்ணுகிறோம். பூரணமான மனிதர்களை மட்டுமே தேவன் ஆசீர்வதிக்கக்கூடுமானால், அவரிடம் ஆசீர்வாதம் பெறத் தகுதியுள்ளவர்கள் ஒருவருமே இருக்க மாட்டார்கள். ஏனெனில் எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களாகிவிட்டோம். தேவனிடமிருந்து எந்த ஒரு நன்மையும் பெற நம்மில் எந்த தகுதியுமே இல்லை. இப்படிப்பட்ட நமக்கு தேவன் இலவசமாய் தரும் ஆசீர்வாதங்கள்தான் கிருபை. ஆகவே கிரியையை தேவனுக்கு நினைவுபடுத்தி அதனிமித்தம் தேவன் உங்களை ஆசீர்வதிக்கும்படி ஜெபிக்காமல் "கிருபையாய் என் மீது மனமிரங்கும்" என்று ஜெபிப்போம். ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வோம்.

- Mrs. தவமணி வைரவேல்

 

ஜெபக்குறிப்பு;

மிஷனெரி அறைகள் கட்டுமானப் பணிகளின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al