By Village Missionary Movement
Sunday, 20-Aug-2023இன்றைய தியானம்(Tamil) 20.08.2023 (Kids Special)
BE CAREFUL
"ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்" - யோவான் 8:36
ஒரு அழகான குட்டி குரங்கு அங்குமிங்கும் தாவிக் கொண்டு ரொம்ப ஜாலியா விளையாடிக் கொண்டிருந்தது. மனிதர்கள் எல்லாரும் பரலோகம் போகணும்னு நினைக்கிறாங்களே, அது எப்படி அம்மா இருக்கும் என்று குட்டி குரங்கு, தாய் குரங்கிடம் கேட்டது. துறவியிடம் கேட்டால் தெரிந்துவிடும் என்றது அம்மா. அந்த குட்டி குரங்கு துறவி இருக்கும் இடத்தையும் தேடி கண்டு பிடித்தது. அதே கேள்வியை துறவியிடம் கேட்டது. அவர் சற்று யோசித்து விட்டு குட்டி குரங்கிடம் ஒரு வாழைப்பழத்தைக் கொண்டு வந்து இதை பத்திரமாக வைத்து கொள். நாளை வரும் போது கொண்டுவா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
குட்டி குரங்கும் நாளை நமக்கு பதில் கிடைத்து விடும் என்று சந்தோஷத்தில் ரொம்பவும் ஜாலியாக சென்றது. கையிலுள்ள வாழைப்பழத்தை திருப்பி, திருப்பி பார்த்தது. இதை நாளைக்கு கொண்டு போக வேண்டுமென்று பத்திரமாக வைத்துக் கொண்டது. சிறிது நேரம் கழித்து முகர்ந்து பார்த்தது. வாசனை நன்றாக இருக்கிறதே என்று நக்கி பார்த்தது. சரி சாப்பிட்டால் தானே தப்பு உரித்து பார்த்தால் என்ன என நினைத்தது. அச்சச்சோ துறவி பத்திரமா கொண்டு வரச் சொன்னாரே என்று நினைத்ததும் வாழைப்பழத்தை வைத்துவிட்டு, மரத்தில் அங்குமிங்கும் தாவி விளையாடினாலும் வாழைப்பழத்தை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. சரி, உரித்து மட்டும் பார்க்கலாம் என்று நினைத்து உரிக்க ஆரம்பித்தது. நாக்கில் எச்சில் ஊறவே பரலோகமா? வாழைப்பழமா? குட்டி குரங்கு தவியாய் தவித்து இறுதியில் வாழைப்பழத்தை சாப்பிட்டு முடித்தது. அடுத்த நாள் துறவியை எப்படி பார்க்க முடியும்? முடியாது இல்லையா?
குட்டீஸ், பரலோகத்தை பற்றி தெரிந்து கொள்ள நினைத்த குட்டி குரங்கு வாழைப்பழத்தால் தோற்று போனதைப் போல, நீங்களும் சிற்றின்பமான பாவகாரியங்களில் தோற்றுப் போக கூடாது. சாத்தானும் சின்ன பொய்தானே, திருட்டுத்தனம் பண்ணு, கெட்ட வார்த்தை பேசு யாரும் உன்னை பார்க்கவில்லை நீ மாட்டிக்கொள்ள மாட்டாய் என்று ஆசை ஆசையாய் உனக்கு சந்தோஷத்தை கொடுப்பதை போல வருவான். நீ அதைக் கேட்டு அவனது வார்த்தைக்கு செவி சாய்த்துவிடாதே! தவறு செய்தாலும் அதை இயேசப்பாகிட்ட சொல்லி மன்னிப்புக் கேட்டு திரும்ப அந்த தவறை செய்யாமல் விடுதலை பெறணும். ஓகேவா, குட்டி செல்லங்களே!
- Mrs. அஞ்சலி
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864