Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 19.08.2023
Share:

By Village Missionary Movement

Saturday, 19-Aug-2023

இன்றைய தியானம்(Tamil) 19.08.2023

 

என் வீடு நிரம்பும்படியாக…

 

"...இன்னும் இடம் இருக்கிறது… என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே... கூட்டிக்கொண்டுவா;" - லூக்கா . 14:22,23

 

இன்றைய வேதப்பகுதியிலே, ஒரு மனிதன் பெரிய விருந்தொன்றை ஆயத்தப்படுத்தி அநேகரை அழைக்கிறான். விருந்து வேளை வந்தபோது, விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் சாக்குப்போக்கு சொல்லத் தொடங்குகிறார்கள். ஒருவன் வயலுக்கு போகவேண்டுமென்று சொல்கிறான். மற்றொருவன் மாட்டை சோதிக்க வேண்டுமென்று சொல்லி போக மறுக்கிறான். இன்னொருவன் "இப்போதுதான் திருமணம் செய்திருக்கிறேன் நான் வரவில்லை" என்கிறான். ஆனால் அந்த எஜமானின் விருப்பம் எப்படியாவது என் வீடு ஜனத்தினால் நிறைய வேண்டும் என்பதுதான். ஆகவே சினங்கொண்டு, "தெருக்கள் வீதிகளில் போய் ஏழைகளையும், ஊனரையும், சப்பாணிகளையும், குருடர்களையும் கொண்டு என் வீட்டை நிரப்பு" என்று ஊழியக்காரனுக்கு கட்டளையிடுகிறான்.

 

இன்றைக்கு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மனநிலையும் இப்படித்தான் இருக்கிறது, பரலோகத்தை தன்னுடைய ஜனங்களால் நிரப்ப வேண்டுமென்று! ஆனால் 2000 வருடத்திற்கு மேலாகியும் இன்னும் இடம் காலியாகவே உள்ளது. ஆதலால் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நம் ஒவ்வொருவரிடத்திலும் தயவுசெய்து காலியிடத்தை நிரப்புங்கள் என்று வருந்திக் கேட்கிறார். 

 

அந்த ஆண்டவரின் விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? இவ்வளவு ஜெபிக்கிறேன், இவ்வளவு ஊழியம் செய்கிறேன், இவ்வளவு கொடுக்கிறேன் என்று திருப்தியாகி விட்டோமோ? கிறிஸ்தவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறோமோ? கிறிஸ்தவர்களுக்கு வல்லமை முகாம்களையும், பயிற்சி முகாம்களையும் நடத்துகிறோம். நம்முடைய T.V. நிகழ்ச்சிகளிலேயும் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரமே 90% நேரம் அளிக்கிறோம். நாம் செய்கிற அனைத்தும் நல்லதே. நாம் இதுவரை செய்த ஊழியத்தில் நமக்கும், கிறிஸ்தவர்களுக்குமே முக்கியத்துவம் கொடுத்தோம். ஆனால் நாம் செய்த ஊழியத்தினால் இடம் நிரம்பவில்லையே? இதோ நம்முடைய திட்டத்தை, தரிசனத்தை, முயற்சியை மாற்றி வேறே திட்டத்தை ஆண்டவரே கொடுக்கிறார். அது என்ன? லூக்கா 14:23 வசனத்தின்படி மெயின் ரோடுகள், தெருக்கள், வீதிகள், ஆஸ்பத்திரிகள் என்று போய் சுவிசேஷத்தைக் கூறி ஆண்டவரின் விருந்து சாலையை ஜனங்களால் நிரப்புவோம்.

 

பிரியமானவர்களே! நமதாண்டவர் வெறுமையான யாவற்றையும் நிரப்புகிறவர். அப்படி பரலோகமும் பூரணமாய் நிரம்ப வேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார். "இன்னும் இடம் இருக்கிறது" என்கிறார். காலியான இடத்தை நிரப்ப நீங்கள் செயல்படுவீர்களா?

- Bro. K. டேவிட் கணேசன்

 

ஜெபக்குறிப்பு: 

தோழமை ஊழியர்கள் மற்றும் அவர்கள் பணி செய்யும் கிராமங்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al