Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 18.08.2023
Share:

By Village Missionary Movement

Friday, 18-Aug-2023

இன்றைய தியானம்(Tamil) 18.08.2023

 

தேறினவன்

 

"…நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக் கடவோம்:...” - பிலிப்பியர் 3 :15

 

1. உன்னைச் சுற்றி அனைவரும் பின்மாற்றம் அடைந்து விழுந்து போகும் சூழ்நிலையிலும் வழுவாமல் காக்கிற தேவனை பற்றிக் கொண்டு நீ நிற்பாயானால் நீ தேறினவன்.

 

2. எல்லோரும் உன்னை சந்தேகிக்கும்போது நீ உன்னை சந்தேகிக்காமல் உன்னை நீ நம்புவாயானால் நீ தேறினவன்.

 

3. பொறுமையற்ற பூமியில் பொறுத்தவர் பூமி ஆழ்வார் என்று உணர்ந்து நீ பொறுமையாக இருந்தால் நீ தேறினவன்.

 

4. நீ மெய் ஞானத்தினால் நிறையப்பட்டவனாய் இருந்தாலும் ஞானியைப் போல பிறருக்கு காட்சி கொடுக்க முயற்சிக்காதிருப்பாயானால் நீ தேறினவன்.

 

5. வெற்றியிலும் சரி, தோல்வியிலும் சரி உன்னை நீ இழந்துவிடாமல் உன்னை நிதானமாய் காக்கக்கூடுமானால் நீ தேறினவன்.

 

6. நீ பேசும் உண்மையான வார்த்தையை நயவஞ்சகர்கள் பிரித்து, அதை பொய்யின் வார்த்தைகளாகக் கூறி உன்மேல் குற்றம் சுமத்தும்போது அதை பதறாமல் பொறுக்ககூடுமானால் நீ தேறினவன்.

 

7. உன் வாழ்வின் முழுபெலனையும் கொடுத்து நீ கட்டியவை அநியாயமாக உடைக்கப்படும்பொழுது அதை பொறுமையாய் மீண்டும் கட்ட சிந்தை உனக்கு உண்டென்றால் நீ தேறினவன்.

 

8. உனக்கு இராஜாக்களும், மந்திரிகளும் நண்பர்களாக கிடைக்கப்பெறும் நேரத்திலும் எளிய நண்பர்களை நீ துச்சமாய் எண்ணாமல் அவர்களையும் மதிப்பாயானால் நீ தேறினவன்.

 

9. நீ செய்யும் நற்கிரியைகளை பிறர் பார்த்து போற்ற வேண்டும் என்ற ஏக்கத்தைத் தூர எறிந்து, வலது கை செய்வது இடது கைக்கு தெரிய வேண்டியதில்லை என்ற சிந்தை உனக்கு உண்டாகும்போது நீ தேறினவன்.

 

10. உலகத்தையும், உலகத்திலுள்ளவைகளையும் நேசிக்காமல் உன்னுடைய உள்ளம் தேவனை நேசித்து தேவன் மேல் உள்ள அன்பினால் உலகத்திலுள்ளோரை நேசிக்கக்கூடுமானால் நீ தேறினவன்.

 

11. நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் தேவ சாயலில் உண்டாக்கப்பட்டவர்கள் என்றுணர்ந்து ஒருவரையும் அற்பமாய் எண்ணாதிருப்பாயானால் நீ தேறினவன்.

- கிப்லிங் எழுதிய "கை"என்ற கவிதையை தழுவி எழுதப்பட்டது

 

ஜெபக்குறிப்பு;

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் 500 மிஷனெரிகள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al