By Village Missionary Movement
Wednesday, 16-Aug-2023இன்றைய தியானம்(Tamil) 17.08.2023
எது மதிப்பு?
"….மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்" - சங்கீதம் 8:5
இன்றைய தினத்திலே ஒரு மனிதனுக்கு மதிப்பைக் கொடுக்கக் கூடியது அல்லது உண்மையான அந்தஸ்தைக் கொடுக்கக் கூடியது எது என்று சிந்திப்போம். நாம் வாழும் இந்த சமுதாயத்தில் ஒருவனது குணநலன்களுக்குக் கொடுக்கும் மரியாதையை விட அவன் அணியும் உடைக்கும், கட்டி வாழும் வீட்டிற்குமே அதிக மதிப்பு கொடுக்கப்படுகிறது. ஒருவன் வாங்கும் சம்பளத்தின் அளவு, வைத்திருக்கும் கார் இதுவே அவனது மதிப்பை உயர்த்துமென்று கருதப்படுகிறது. ஆனால் உண்மையென்னவென்றால் மனிதனின் நற்கிரியைகளும் உள்ளான சுபாவங்களுமே அவனது மதிப்பை கூட்டுகிறது.
இது குறித்து குடும்ப ஆலோசகர் மைலோ ஆர்னால்ட் பின்வருமாறு கூறுகிறார்,"பெற்றோர் அநேகர் தங்களையும் அறியாமல் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள். சமுதாயத்தில் தங்கள் பிள்ளைகள் பிற பிள்ளைகளை விட உயர்வான உடைகளை அணிய வற்புறுத்துகின்றனர். பிள்ளைகளின் சவுகரியத்தை விட பெற்றோரின் திருப்தியே முக்கியப்படுத்தப்படுகிறது. இப்படி வளர்க்கப்படும் குழந்தை இரண்டு விதமாக பாதிக்கப்படலாம். ஒன்று அது அதிகமாக உடைகளைக் குறித்த சிந்தனையிலேயே வளருகிறது. இரண்டாவது பிறரைக் கவர வேண்டுமானால் சிறப்பாக உடுத்தவேண்டுமென்ற தவறான எண்ணத்திற்கு அடிமையாகிவிடுகிறது. தன்னை யாரும் கவனிக்கவில்லையென்றால் ஒருவித தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிவிடுகிறது. அக்குழந்தை ஒரு பெண்ணாக இருந்தால் வாழ்நாளெல்லாம் உடைக்கு முக்கியத்துவம் கொடுத்து பணத்தை வீணாக்கி விரைவில் தன் கணவரை ஆண்டியாக்கிவிடுவாள். ஆகவே பெற்றோர் செய்ய வேண்டியதென்ன? தங்கள் பிள்ளை மற்ற குழந்தைகளை விட்டு கூட்டத்தில் தனித்து தெரியாதபடி இயல்பாக உடை அணிய செய்யுங்கள். சுத்தமான, சௌகரியமான உடையை அணியக் கொடுங்கள். நாம் அணிந்திருக்கும் உடையை விட நாமே முக்கியமான நபர் என்பதை உணரச் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
இதை வாசிப்பவர்களே! நீங்கள் உங்கள் மதிப்பை எதில் தேடுகிறீர்கள்? உங்களுடைய நற்குணங்களால் பிறருடைய பார்வையில் உயர்ந்திருக்கிறீர்களா? அல்லது உங்கள் உடையாலும், உடைமையாலும் உயர்ந்தவர்களாகக் கருதப்பட விரும்புகிறீர்களா? நல்ல சுபாவங்களால் என்றால் உங்கள் மதிப்பு என்றுமே வீழ்ச்சியடையாது. இல்லையென்றால் உங்கள் நிலை ஆபத்தானது. வெளித் தோற்றங்கள் மாறும்போதும், வசதிகள் குறையும்போதும் நீங்கள் மிகவும் சோர்ந்து உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும் அபாயம் உண்டு. உங்கள் மதிப்பை எங்கே தேடுகிறீர்கள்?
- Bro. J. சந்தோஷ்
ஜெபக்குறிப்பு:
24 மணி நேர சங்கிலி தொடர் ஜெபம் நமது அனைத்து பணித்தளங்களிலும் தடையின்றி நடைபெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864