By Village Missionary Movement
Tuesday, 15-Aug-2023இன்றைய தியானம்(Tamil) 15.08.2023
மெய்யான விடுதலை
"…பாவம் செய்கிற எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்…" - யோவான் 8:34
நம் பாரதத்தின் 76-வது சுதந்திரதினத்தை கொண்டாடும் இச்சமயத்தில் மெய்யான விடுதலை எது என்பதை சிந்திப்போம். நம் தேச மக்கள், உலகத்தின் அதிபதியாகிய சாத்தானுக்கு அடிமைப்பட்டிருப்பதை உணராமல் தாங்கள் முழு சுயாதீனர் என்றும் தங்கள் மனதும், மாம்சமும் விரும்புவதைச் செய்ய முழு உரிமையும் தங்களுக்கு உண்டு என்றும் நினைத்து ஏராளமான கொடிய பாவங்களுக்கும் பாவ பழக்கவழக்கங்களுக்கும் அடிமைப்பட்டுள்ளனர். ஓரினச் சேர்க்கை போன்ற பாவங்களைச் செய்ய உரிமைகோரி போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர்.
ஒரு மனிதன் கரடி ஒன்றிற்கு நளினமாக நடனமாட கற்றுக் கொடுத்து அதன்மூலம் பணம் சம்பாதித்து வந்தானாம். நடனமாட படிக்க கரடி பெற்ற கசைஅடிகள் ஏராளம். அவனிடமிருந்து தப்பி காட்டிற்குள் ஓடிய கரடி தன்னை பிற விலங்குகளிடமிருந்து உயர்வாகக் காட்டிக் கொள்ள அடிக்கடி நடன வித்தைகளைச் செய்து வந்தது. ஒருநாள் வயதான கரடி ஒன்று, "நீ அடிமையாக இருந்து கசையடி பெற்று கற்ற நடனத்தை எங்களிடம் காட்டியா பெருமைப்படுகிறாய்" என்றதாம். அந்த நாள் துவங்கி கரடி நடனமாடிக் காட்டுவதை நிறுத்தி கொண்டதாம். அந்த கரடிக்குக் கூடத் தான் அடிமைப்பட்டிருந்த உணர்வு இருந்தது. ஆனால் சாத்தானின் கைதிகளாக அவனது கட்டளைப்படி பாவத்திற்கு அடிமைப்பட்டிருக்கிற மனிதர்களோ தங்களை சுயாதீனர் என்று கற்பனை பண்ணிக் கொண்டு, உணர்வற்று வாழ்கின்றனர். சாத்தானின் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கக் கூடிய ஒரே தெய்வம் இயேசு கிறிஸ்து மாத்திரமே!
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியாகிய கென்னடி "நாடு நமக்கு என்ன செய்கிறது என்று கேளாமல், நாம் நாட்டிற்காக என்ன செய்ய வேண்டும்? என்று கேளுங்கள்" என்றார். நாமும் நம் தேசமக்களும் சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி, கிறிஸ்துவின் அடிமைகளாக வேண்டுமென்று ஜெபித்து, ஜெயம் பெறுவதுதான் நாம் நாட்டிற்குச் செய்யும் மகத்தான கடமை. பலகோடி மக்கள் நிறைந்த நம் தேசத்தில் நம்மைச் சிறு கூட்டமாகத் தெரிந்து கொண்ட நம் தேவன் இக்கடமையை நாம் நம் தேசத்திற்காக செய்ய மாட்டோமா என்று ஆவலுடன் ஏங்கி நிற்கிறார். கீழ்ப்படிவோமா? இந்த ஜெப ஊழியத்தை எல்லோரும் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் தினமும் செய்யலாமே!
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:
இன்று பாளையங்கோட்டையில் நடைபெறும் எழுப்புதல் வாலிபர் முகாமில் அநேக வாலிபர்கள் கலந்துகொள்ள ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864