Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 14.08.2023
Share:

By Village Missionary Movement

Sunday, 13-Aug-2023

இன்றைய தியானம்(Tamil) 14.08.2023

 

நித்திய மகிழ்ச்சி பரிபூரண சுதந்திரம்

 

"…அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே” - ரோமர் 5:10

 

1947 ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் நாள் இந்தியா எங்கும் மகிழ்ச்சியின் ஆரவாரம் ஒலித்தது. நமது தேசிய கொடியை ஏற்றினர். இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். ஆடல், பாடல் கூட இருந்திருக்கும். ஆனால் இதற்காக பலர் பாடுபட்டு இரத்தம் சிந்தினர். பலர் தம்முயிர் ஈந்தனர். நாம் வாழும் தேசத்தை நமதாக்கிக் கொள்ள பட்ட பாடுகளை சொல்ல முடியாது. மேலும் பசுமையான, வளமையான தேசம். சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் ஆகி உள்ளன.

 

பிற நாட்டிடம் அடிமைப்பட்டதிலிருந்து விடுதலை பெற்று விட்டோம். ஆனால் நமக்குள் நாமே அடிமைப்பட்டு கட்டப்பட்டுள்ளோம். அதனால் சந்தோஷத்தை இழந்து அடிமையாகத்தான் இருக்கிறோம். இன்னும் ஜாதி, மொழி, மதம் என கட்டப்பட்டு சண்டைகள் பேதங்கள் எழுகின்றன. தேசம் அமைதியும் சமாதானமும் இன்றி காணப்படுகிறது.

 

1947 ல் சுதந்திர சந்தோஷம் மக்களிடையே காணப்பட்டாலும் ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் வாழ்விலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி இருந்தது என உறுதியாய்க் கூற இயலாது. தனிப்பட்ட வாழ்வில் கவலைகள், கஷ்டங்கள் இருக்கத்தான் செய்தன. அந்த கவலை, கஷ்டங்கள் போக்க ஒரு மனிதனாலும் முடியாது. நாம் ஒவ்வொருவரும் பாவம், சாபம், வியாதி இவற்றிலிருந்து விடுதலை பெற்று மன அமைதியையும் அதனால் உண்டாகும் மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் நிரந்தரமாய் பெற வேண்டும் என நம்மை படைத்த தேவன் விரும்பி தாமே படைப்பாளர் என்கிற அதிகார நிலையிலிருந்து அன்பினால் இறங்கி பாவத்தினால் உண்டாகும் எல்லா சாபத்தையும், கஷ்டங்களையும் ஏற்று தனியாய் தானாய் சகல பாடுகளையும் பட்டு அதில் இறந்தும், ஜெயமாய் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து உள்ளார். இன்றும் இந்த நித்திய விடுதலையை எல்லோரும் பெற்று மகிழ்ச்சியும், சமாதானமும் பெற உதவி செய்து கொண்டு இருக்கிறார். இன்றும் அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டவர்களுக்கு மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் நித்திய வாழ்வு உறுதி.  

 

சுதந்திர தினம் என்றதும் பல தலைவர்களின் தியாகமும் இரத்தமும் நம் ஞாபகத்தில் வருகிறது. நிலையான மகிழ்ச்சி சமாதானம் வேண்டும் என எப்போது உணருகிறீர்களே அப்போது உங்களுக்கு இயேசுவின் அன்பும் அவரது இரத்தமும்தான் அவைகளைத் தரமுடியும். அதனை ஏற்று உங்களை கழுவும் படி அறிக்கை செய்தால் மகிழ்ச்சியும், சமாதானமும் உங்கள் உள்ளத்தை நிறைக்கும். நீங்கள் என்றும் இந்த விடுதலையை கொண்டாடலாம். நீ அவரை அழைத்தால் அவர் வந்து விடுதலையை நித்தியமாய் தந்து வாழ வைப்பார் தம்மோடு.

- Mrs. கிரேஸ் ஜீவமணி

 

ஜெபக்குறிப்பு:

.நமது வளாகத்தில் டியூசன் சென்டர் மூலம் சந்திக்கப்படும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al