By Village Missionary Movement
Saturday, 12-Aug-2023இன்றைய தியானம்(Tamil) 13.08.2023 (Kids Special)
எழுப்புதல் ஜெபம்
"நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்" - 1 யோவான் 5:4
அடர்ந்த காடுகள் நிறைந்த மலைப்பகுதியில் ஒரு கிராமம் இருந்தது. இங்கு கரண்ட் வசதியோ, மருத்துவனை, போக்குவரத்து வசதிகளோ, பள்ளியோ கிடையாது. அப்போ எவ்வளவு கஷ்டமா இருக்கும். உங்களுக்கு எல்லா வசதிகளும் இருக்குது இல்லையா. அதுக்காக இயேசப்பாவுக்கு நன்றி சொல்லணும். சரியா குட்டீஸ்! அங்குள்ள மக்கள் பாசி, மணிகளை கோர்த்து மாலையாக அணிந்து கொள்வார்கள். உடம்புக்கு என்ன செய்தாலும் மந்திரவாதியிடம் சென்று அவர் சொல்வதை அப்படியே கேட்பார்கள். சில நேரங்களில் பரிகாரமும் செய்ய சொல்வார். கயிறுகட்ட சொல்வார், சூடும் போட்டு விடுவார். அடிக்கடி பலி செலுத்துவதும் நடந்து வந்தது. இந்த கிராமத்தில் இவா, எமி என்ற இரண்டு சிறுமிகள் இருந்தாங்க. திடீரென்று இவா-க்கு ரொம்ப காய்ச்சல் அதிகமானது. அப்பா மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றார். அந்த மந்திரவாதி என்ன செய்தார் தெரியுமா? பழுக்க காய்ச்சின கம்பியால் இவாவோட நெற்றியில் ஒரு சூடு போட்டார். ஐயோ வலி தாங்க முடியாமல் துடித்து போனாள். வலி ஒரு பக்கம், காய்ச்சலும் குறையவே இல்லை.
ஒருநாள் மந்திரவாதி சொன்னார் காய்ச்சல் குறையவில்லையென்றால் அது சாபம். அவளை பலி செலுத்த வேண்டும் என்று சொல்லி விட்டார். அந்த நேரத்தில் யாரென்று தெரியாத ஒருவர் இயேசுவை பற்றி சொல்லி வேதபுத்தகம் ஒன்றை கொடுத்தார். புண்ணுக்கு மருந்து ஒன்றையும் காய்ச்சலுக்கு மாத்திரையும் கொடுத்து ஜெபித்து விட்டு சென்றார். கொஞ்சம் கொஞ்சமாக காய்ச்சல் குறைந்து புண் ஆற ஆரம்பித்தது. இன்னொரு பக்கம் பலி செலுத்த ஏற்பாடும் செய்து கொண்டிருந்தார்கள். இவாவும், எமியும் இயேசப்பாவை நோக்கி ஜெபம் செய்தாங்க. என்ன ஆச்சரியம்! சில மணி நேரங்களில் காய்ச்சல் சரியானது. தீ புண் நன்றாக ஆறியிருந்தது. வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர் அதிர்ந்து போனாங்க. எப்படி இந்த அற்புதம் நடந்தது என்று கேட்ட போது இயேசுசாமி கிட்ட வேண்டிகொண்டோம் ஒரு ஒளி வந்து என் மீது பட்டவுடன் நான் சரியாகி விட்டேன் என்று இவா சொன்னதும் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ரொம்ப சந்தோஷம். மந்திரவாதியும் இதை கேள்விபட்டு வந்தார். உனக்கு சுகம் தந்ததுதான் உண்மையான சாமி என்று சொன்னதும், அந்த கிராமமே பலி செலுத்தும் பழக்கத்தலிருந்து வெளிவந்தது.
குட்டீஸ்! இவா, எமி இரண்டு பேரும் இயேசுவை கேள்விபட்டதும் அவர்மீது நம்பிக்கை வைத்து ஜெபித்ததால் எவ்வளவு பெரிய மாற்றம் வந்தது பார்த்தீர்களா? இப்படிப்பட்ட மக்களுக்காக நீங்களும் ஜெபித்தால் எழுப்புதல் நிச்சயம் வந்து விடும். அல்லேலூயா!
- Mrs. ஜோதி ஸ்டாலின்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864