Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 12.08.2023
Share:

By Village Missionary Movement

Friday, 11-Aug-2023

இன்றைய தியானம்(Tamil) 12.08.2023

 

கர்நாடகம் 

 

"…எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது" - யோவான்4:21

 

கர்நாடகத்தில் முதன் முதலில் 16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் வருகையால் கிறிஸ்தவம் நுழைந்தது. பின்னர் 1545 ஆம் ஆண்டு செயின்ட் பிரான்சிஸ் சேவியர் அவர்களின் வருகையால் அது மேலும் வளரத் தொடங்கியது. கர்நாடகத்தின் மேற்குக் கடற்கரை பகுதிகளான கார்வார் தொடங்கி மங்களூர் வரை மிக அதிக எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் காணப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க பிரிவினை சார்ந்தவர்களாக விளங்கினர். இவர்களின் தொகை கர்நாடகத்தின் மற்ற பகுதிகளை காட்டிலும் இந்தப் பகுதியில் அதிக அளவில் இருந்தது.

 

இந்திய மண்ணின் கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவம் பின் தங்கிய நிலையிலே உள்ளது. எனினும் அதை சீர்படுத்துவதில் மட்டுமல்ல, கல்வியிலும் தத்துவ அறிவிலும் மேம்பட செய்வதிலும் கிறிஸ்தவம் பெரும்பங்கு வகித்து வருகிறது.

 

2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி கர்நாடகத்தில் கிறிஸ்தவம் 1.87% மட்டுமே உள்ளது. புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களும் இங்கு உள்ளனர். அதில் பலர் பிரிட்டிஷ் மிஷினரிகளால், இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சி புரிந்த நாட்களில் கிறிஸ்தவத்தை தழுவியவர்கள். எனினும் பிரிட்டிஷார் மக்களை தன்னார்வமாக கிறிஸ்தவ மதத்தை தழுவ செய்தனர். பெங்களூரை பொறுத்தவரையில் இரு வகுப்பினர்களும் மிகுந்து காணப்படுகின்றனர். பெங்களூரில் மிகப் பழமையான செயின்ட் மேரிஸ் பேசிஸிலிகா தேவாலயம் விளங்குகிறது. 2001 ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 10,09,164 ஆகவும், 2011 ஆம் ஆண்டு 11,42,647 ஆகவும், உள்ளது. கி.பி. 52 இல் கர்நாடகத்தின் தலைநகரமாக விளங்கும் மைசூருக்கு இறைத்தூதர் தோமா அவர்களும் கிறிஸ்தவத்தை கொண்டு சென்றார் என்ற குறிப்பும் உள்ளது.

 

2008இல் தெற்கு கர்நாடக பகுதியில் வசித்த மக்கள் மற்றவர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர் அத்தகைய நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் உடுப்பி, சிக்மகளூர், மற்றும் தட்சன கனடா ஆகும். இது போன்ற நிகழ்வுகள் பல ஏற்படும் பொழுதும் கிறிஸ்தவம் கர்நாடகத்தில் ஆண்டவருக்கு மகிமையாக பல நிலைகளில் வளர்ச்சி அடைந்த நிலையிலேயே உள்ளது.

 

அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம். (மத் 9:37) எனவே நம் இயேசுவின் வருகைக்கு முன்பாக இன்னும் துரிதமாய் செயல்பட்டு, கர்நாடகத்தை அவருக்கு சொந்த மாநிலமாக மாற்றுவோம்.  

- Mrs. ஜெயந்தி பாக்கியநாதன்

 

ஜெபக்குறிப்பு:

நமது ஊழியத்தில் புதிய இருசக்கர வாகனங்கள் தேவையாய் உள்ளது. உதவி செய்யும் நபர்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler online casino online casino Piabet Piabet Giriş Ngsbahis Ngsbahis Giriş İnterbahis İnterbahis Giriş Klasbahis Klasbahis Giriş Coinbar Coinbar Giriş Limanbet Limanbet Giriş İmajbet İmajbet Giriş Restbet Restbet Giriş Matbet Matbet Giriş Jasminbet Jasminbet Giriş Belugabahis Belugabahis Giriş Online casino nz Best payout online casino nz jojobet jojobet giriş jojobet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş perabet perabet giriş perabet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş Meritking Perabet Holiganbet jojobet jojobet giriş jojobet güncel giriş bahsegel bahsegel bahsegel bahsegel bahsegel perabet perabet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş holiganbet holiganbet giriş belugabahis matbet romabet alobet alobet giriş bahissenin bahissenin giriş bayconticasino bayconticasino giriş atlasbet atlasbet giriş betcio betcio giriş grandpashabet grandpashabet giriş marsbahis marsbahis giriş matbet matbet giriş nakitbahis nakitbahis giriş pashagaming pashagaming giriş Meritking Meritking giriş imajbet imajbet giriş İmajbet Prizmabet Yakabet Betsat Betnano Restbet Perabet Perabet Giriş Perabet Güncel Giriş Cratosroyalbet