By Village Missionary Movement
Friday, 19-Mar-2021இன்றைய தியானம்(Tamil) 19-03-2021
நம்பிக்கை
“அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்;…” -யோபு 13:15
கப்பல் ஒன்று புறப்பட்டது, அனைவரும் மிகவும் சந்தோஷமாகப் பயணம் செய்தனர். அதில் வயது முதிர்ந்த ஒரு மாலுமியும் சென்றார். குறிப்பிட்ட தூரம் சென்றதும் திடீரென்று காற்றும், புயலும் அடித்து, கப்பல் மிகவும் அசைந்தது. அப்போது அந்தக் கப்பலை ஓட்டிச் சென்ற மாலுமி செய்வதறியாது இருக்கையில், வயது முதிர்ந்த மாலுமி கூறினார், கப்பலை ஒரு நிலையில் நிறுத்தி அதை அங்கேயே நிற்கச் செய் என்று. அதே போல் அந்தக் கப்பல் மாலுமியும் சில மணி நேரங்கள் போராடி நிற்கச் செய்தார். சில மணி நேரங்களில் புயல் காற்று திசை மாறியதும் புறப்பட்டுச் சென்றனர். கப்பல் மாலுமி வயது முதிர்ந்த மாலுமிக்கு நன்றி கூறினார். அப்போது அவர், “கடும் புயல் வீசுகையில் நாம் கப்பலை ஒரு நிலையில் நிறுத்தி அதை அங்கேயே நிற்கச் செய்ய வேண்டும் மறவாதே” என்றார்.
யோபு என்ற செல்வந்தனான மனிதனும் தன் வாழ்வில் புயல் போல் பல போராட்டங்கள் எழும்புகையில் கிறிஸ்து இயேசுவின் மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்கிறார். யோபுவுக்கு 10 பிள்ளைகள், ஆடு, மாடு, ஒட்டகங்கள், கழுதைகள், அநேக வேலைக்காரர்கள் என மிகுந்த செல்வந்தனாக இருந்தான். அவனை ஊரார் மதித்தனர், மரியாதை செலுத்தினர். ஆனால் ஒரு நாள் அவன் வாழ்வில் புயல் வீசியது. ஒரே நாளில் தன் பிள்ளைகள், ஆடு, மாடு, ஒட்டகங்கள், கழுதைகள், வேலைக்காரர்கள் என எல்லாவற்றையும் இழந்தான். அப்போது “கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்” என்றான். மறுநாளில் அவன் உடல் முழுவதும் பருக்கள் நிறைந்து ஒரு ஓட்டினால் சுறண்டிக்கொண்டு இருந்தான். தன் வாழ்க்கை என்னும் படகில் விசுவாசம் என்னும் நங்கூரத்தை கிறிஸ்து இயேசுவின் மீது போட்டவனாக அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்றார். என் ஜீவன் பிரிந்தாலும் நான் நம்பும் என் தேவன் என் ஆத்துமாவை மீட்க வல்லவர் என்பதை யோபு அறிந்திருந்தான். இறுதியில் தன் ஜீவனை மாத்திரமல்ல இரட்டிப்பான ஆசீர்வாதமும் பெற்றான்.
இதை வாசிக்கும் நண்பரே! உங்கள் வாழ்வில் புயல் போன்ற கஷ்டங்கள் துன்பங்கள் எழும்பும் போது என்ன செய்கிறீர்கள்? நிலைகுலைந்து, பதற்றமடைந்து, வாழ்க்கை படகை சேதப்படுத்தி விடாதீர்கள். உங்கள் விசுவாசம் என்னும் நங்கூரத்தை கிறிஸ்து இயேசுவின் மேல் போட்டு நிலை நிற்கச் செய்யுங்கள் உங்கள் வாழ்விலும் ஆசீர்வாதத்தை பெறுவீர்கள் என்பது நிச்சயம்.
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு:
தினமும் அதிகாலை 5 மணிக்கு Jio meet Appல் நடந்து கொண்டிருக்கும் ஆன்லைன் ஜெபத்தில் அநேகர் பங்குபெற ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250